Skip to main content

Posts

Showing posts from October, 2014

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

கழிவறை அமைக்க

நாம் அன்றாடம் உடல் கழிவுகளை வெளியேற்ற கழிவறை மிக முக்கியம். அந்த கழிவறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க சில சாஸ்திரங்கள் படி அமைக்கவும்.                  கழிவறையின் கதவு தானாக முடும் படி இருத்தல் அவசியம். அந்த கதவு மூடாமல் இருப்பது வீட்டில் வசிப்பவருக்கு கெடுதல் உண்டாக்கும்.இதில் கவனம் தேவை.  கழிவறையின் தரை தளம் வீட்டின் தரை தளத்தைவிட உயரமாக இல்லாமல் பார்க்கவும். நம் வீட்டின் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் வைக்கவும். மேல்மாடியில் வைக்கும் கழிவறையின் தரைதளம்  உயராமல் இருக்க அரை அடி பள்ளமாக வைக்கலாம். கழிவறையின் கோப்பை வடக்கு தெற்காக இருக்கவும்.

ஆம இடக்காவு - ராகு தோஷம், சர்ப்ப தோஷம் (கோபம்) நிவர்த்தி ஆலயம்

                             கேரளத்திலுள்ள சர்ப்ப ஆலயம் ஆம இடக்காவு. பண்டைய காலத்தில் பரசுராமர் ஆம இடக்காவுக்கு வந்தார். ஆமைக்கு மேல் நாககன்னிகள் இருப்பதை கண்டார். நாககன்னியை ஆமையின் மீது இருந்து இறங்கி செல்லச் சொன்னார் பரசுராமர். நாககன்னிகள் ஆமையை விட்டு கீழே இறங்கி சென்றபின் ஆமை அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கயே நின்றது.                         ஆமையையும், நாககன்னிகளையும் அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் பரசுராமர். அந்த இடமே ஆம இடக்காவு என பெயர் பெற்றது. பின்னர் அங்கே பிராமணரை அழைத்து பூஜை செய்தார். நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பூஜை செய்தால் நல்லதே நடக்கும் என்றார். அந்த வம்சத்தில் வந்தவர்களே இன்றும் பூஜை செய்கின்றனர்.                                       இங்கே நாக பூஜை பிரசித்தி பெற்றது.காவுகளும் (சர்ப்பம்), காவு விருட்சங்களும் உள்ளன. இவற்றை ஒரு பீடத்...

பாம்புக்கு முட்டை, பால் வைப்பது ஏன்?

                      பாம்புக்கு முட்டை, பால் வைப்பது பாம்பின் உணவுக்காக இல்லை. பெண் பாம்பின் உடலிலிருந்து ஒரு விதமான மணம் இயற்கையில் வரும் இது தன் இணையை தேடுவதற்கு. அவ்வாறு ஏற்படும் மணத்தினால் இரண்டு பாம்புகள் இனைந்து முட்டைகள் இடும். இந்த மணத்தை தடுப்பதற்காக பாம்புக்கு முட்டை, பால் வைத்து வழிபடுகின்றனர் நமது மக்கள்.                        இந்த மணத்தை வைத்து பாம்புகள் உற்பத்தி குறையும். மக்கள் நிம்மதியாக பாம்பிடமிருந்து தப்பித்து வாழலாம் 

நகுச மன்னனுக்கு சாபம்

                பண்டைய காலத்தில் நகுச மன்னன் ஆட்சி செய்தான். அவன் நல்ல குணம், நல்ல பக்தி,மக்கள் மீது அன்பும் , குரு பக்தி, தெய்வ பக்தி உள்ளவன். அஸ்வமேத யாகம் பல செய்து நல்ல புண்ணியம் பெற்றிருந்தான்.                     ஒருநாள் விருத்தா சூரன் என்ற அரக்கன் பூலோகம், சுவர்கலோகம் போன்றவற்றை ஆக்ரமித்தான். கண்ணில் கண்ட அனைவரையும் கொடுமைப் படுத்தினான். இந்திரலோகத்திலும் சென்று அங்கும் கொடுமைப் படுத்தினான். இவனுக்குப் பயந்து இந்திரன் இந்திரலோகத்தை விட்டு தாமரை தண்டின் உள்ளே சென்று தவம் மேற்கொண்டான்.                    அப்போது இந்திரலோகத்தில் இந்திரன் இல்லாததால் இந்திர லோகமே கவலையில் ஆழ்ந்தது. நகுச மன்னனையே ஆட்சி பொறுப்பில் அமர்த்த தேவர்கள் எண்ணினர்.நகுச மன்னன் அங்குள்ள ஐஸ்வர்யம், பொன், பொருள், நடனமங்கைகள் எல்லாம் தனக்கு உரிமை கொண்டாடினான். இந்திராணியையும் தனக்கு வேண்டும் என்று அவளிடம் கேட்டான். அவள் மறுத்து தேவகுரு பிரகஸ்பதியிடம் தன்னை காப்பாற்றும்...

மனைவியின் பெயர் சொல்வது சரியா

                          வீட்டில் தனது மனைவி மற்றும் மூத்த மகனின் பெயரை சொல்லக் கூடாது. மனைவிக்கு துணைப் பெயரோ அல்லது அம்மா என்றுதான் சொல்லவேண்டும். தாய்க்குப் பின் தாரம் (மனைவி) என்று பெரியவர்கள் கூறுவது உண்டு.அவ மரியாதையாகப் பேசுபவர்கள் அடுத்த ஜென்மாவில் கொடுமையான  கணவன் கிடைப்பார்.                         குழந்தைகளை வாய்க்கு வந்தபடி திட்டுபவன் அடுத்த ஜென்மாவில் குழந்தைகள் இல்லாமலும் மூர்க்கத் தனமாகவும் ஆதரவும் இன்றி திரிவான்.தாய்,தந்தையரை மதிக்கத் தவறுபவன் ,சகோதரன் துன்பப்படுவதை கண்டு மனம் இரங்காதவன் உற்றார், உறவினரின் வேதனையை கண்டு ரசிப்பவன் ஆதரவின்றி அல்லல் படுவான்.                          ஒரு பெண் கர்பவதியாக இருக்கும் சமயத்தில் அவளுக்கு நல்ல வார்த்தைகளை கேட்கும்படியாகவும், அமைதியான சூழலையும் கொடுக்க வேண்டும் இல்லைஎன்றால் குழந்தை தாய் தந்தையை மதிக்கத் தவறுவார்கள்.      ...

நவகிரகங்கள்

                            மனிதனின் வல்வினை தீர்மானிப்பவை நவகிரகங்கள் ஆகும். நாம் செய்யும் அன்றாட நன்மை, தீமைகளை இந்த ஜென்மத்திலும், அடுத்த ஜென்மத்திலும், முந்தைய ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்தும் நன்மை, தீமைகளை கிடைக்க செய்வார்கள்.மக்களின் மனதை ஆட்சி செய்ய இறைவனால் நியமிக்கப்பட்டவை. இப்பிரபஞ்சம் நெருப்புக் கோளத்திலிருந்து சிதறிய கோள்கள் பல உள்ளன. அவற்றில் பூமியின் மீது ஏழு கிரகங்கள் மற்றும் வட, தென் துருவங்களில் வெட்டிக் கொள்கின்ற ஒளிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.                            படைக்கும் தொழிலுக்கு உதவியாக பிரம்மா - மரீசி, புலஸ்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரசர், புவனகர், வசிஷ்டர் ஆகிய சப்த ரிஷிகளை படைத்தார். இதில் முதலாமவரான  மரீசியின் புதல்வரான காசிபருக்கு பிறந்தவரே சூரியன் . அத்திரி மகரிஷிக்கு புதல்வர் சந்திரன் ஆவார். சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் பிறந்தவரே புதன் ஆவார். ஆங்கிரசாருக்கு தேவ குருவான பிரகஸ்...

பசுவின் பின்பக்கத்தை வணங்குவது ஏன்?

                          ராமனின் வனவாசத்தின் போது தன் தந்தை தசரத சக்ரவர்த்திக்கு சிரார்த்தம் செய்வதற்கு காட்டில் உள்ள பழங்களை பறிக்கச் சென்றார். உடன் லட்சுமணன் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சிரார்த்தத்தை பெறுவதற்காக தசரத சக்ரவர்த்தி வந்தார். அவர் சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைக்குமாறு சீதா தேவியிடம் சொன்னார்.                           அதற்கு சீதா தேவி ராமன்தான் சிரார்த்தம் பண்ணமுடியும் நான் பெண் என்பதால் செய்ய இயலாது என்றாள். ஆனால் தசரத சக்ரவர்த்தியோ சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைத்தால் மட்டுமே என்னால் பெறமுடியும் என்றார். அதற்க்கு சாட்சியாக யாரையாவது வைத்துக் கொள் என்றார்.                       அவர் சொன்னதால் பசு, அக்னி, தாழம்பூ போன்றவற்றை சாட்சியாக வைத்து பழத்தினை வேகவைத்து மாவாக்கி தர்பன உணவுகள...

திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் பிரச்சனை ஏற்படுகிறது ஏன்?

                          ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் கொண்டு செல்லும் போது வீ ட்டினில் ஏற்படும் சகுனங்களை பார்க்கவும். செல்வதற்கு முன்பு தும்மல் வந்தாலோ அல்லது ஒருவர் நீர் அருந்திவிட்டு செல்லவும் என கூறினாலும் அபசகுனமாகும். பொருத்தம் பார்பவரிடம் இந்த வரன்கள் நல்ல வசதியாய் உள்ளனர் என சொல்ல வேண்டாம்.                           ராசி பொருத்தம் , நட்சத்திர பொருத்தம். வேதை பொருத்தம், யோனி பொருத்தம், தினப் பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், மகேந்திர பொருத்தம், நாடி பொருத்தம், கண பொருத்தம், செவ்வாய் தோஷம் இருக்கிறதா என பர்ர்க்கவும். பத்து பொருத்தம் பார்ப்பது மட்டும் போதாது.                        லக்னாதிபதி நட்பாக இருந்தால் மட்டுமே ஒற்றுமையாக இருக்கமுடியும். லக்னத்தில் ராகு உள்ளவர் லக்னத்தில் கேது உள்ளவரை திருமணம் செய்யாமல் இருப்பது நலம். லக்னத்தில் கேது உள்ளவர் லக்னத்தில் ராகு உள்...

குழந்தை பாக்கியம் தரும் முப்பந்தல் இசக்கி அம்மன்

                      பெயர்காரணம் : முவேந்தர்களான சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் வரி வசூல் செய்ய காற்றோட்டமான இடத்தை தேர்ந்தெடுக்க சென்றனர். அப்போது நல்ல இடம் கிடைத்தது.அந்த இடத்தில் பந்தல் அமைத்து வரி வசூல் செய்தனர்.அதுவே காலப்போக்கில் முப்பந்தல் என மாறியது என்று செவி வழிச் செய்தியானது.                      சிறு குழந்தைகள் மண்ணில் அம்மன் சிலைபோல் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். பின் அந்த மண்ணை அப்படியே வைத்து விட்டு சென்றனர். மறுநாள் அந்த இடத்தில் ஒருவரின் கால் தட்டியது என்ன என்று பார்க்கும் போது அங்கு வந்த ஒருவருக்கு சாமி வந்து நான் இந்தஇடத்தில் இருக்கிறேன் என்று கூறினர். அந்த இடத்தில் ஒரு கல்லை வைத்து வணங்கினர்.                      கோவிலின் பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்கு தொடர்ந்த வயிற்றுவலியால் கவலையடைந்தார்.அவரது பேத்தி கனவில் வந்த இசக்கியம்மன் முப்பந்தல் மரத்திற்க்கு கீழே நான் இருக்கிறேன் எ...

மதுரை மீனாட்சி சொக்கநாதர் 64 திருவிளையாடல்

                       சிவனின் திருவிளையாடல் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் மதுரை ஸ்தலத்தில் இறைவனை வலம் வரும்போது இந்த கதைகள் நினைவில் இருந்தால் அந்த சிற்பங்களை பார்க்கும் போது மற்றவரிடம் கூற ஆசையாய் இருக்கும்.                         தெய்வீக மனம் கமழும் மதுரையை பற்றி எழுதும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.இங்கு எனக்கு பிறக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சிலகாலம் பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.எல்லாம் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையின் திருவருளாகும். இங்கு இருந்த நாள்களை என்னால் மறக்க முடியவில்லை. இங்குதான் எனக்கு ஜோதிட ரத்னா பட்டம் கிடைத்தது. இதை பெற்ற எனக்கு புதனின் (மதுரை), குருவின்(குருவித்துறை ) ஆதிக்கம் பெற்ற இந்த மண்ணில் கிடைத்த மிகப் பெரிய புகழாக கருதுகிறேன்.                  இப்பட்டம் பெற உதவிய ஜோதிட ஆசாரியருக்கும், நிறுவனத்தாருக்கும்  உடன் பயின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றிய...

பிரம்ம தேவன் தோன்றுதல்

                            ஜலம், ஜலம் எங்கு பார்த்தாலும் ஜலமாக இருக்குது என்று சுத்தி பார்த்து எங்கிருந்து வந்தது என நினைக்கிறார். இவ்வளவு தண்ணீர் இருக்கிறது இங்கு இந்த ஒரு தாமரை எங்கிருந்து வந்தது. என்னுடைய வேலை என்ன என நினைத்தார். பின் யோசித்ததால் தனக்கு அகங்காரம் உண்டானது.அவர் தாமரையில் தோன்றியதால் தாமரை தண்டின் துவக்கத்தை கண்டுபிடிக்கச் சென்றார். நூறு வருடம் காலம் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அகங்காரம்  அடங்கவில்லை.                    தன்னுடைய ஆசைஅடங்கவில்லை இதனால் துக்கமாய் மாறியது. சிந்தை,ஆசை,நிராசை,துக்கம் தொடங்கி விகாரம் வேலியாய் வந்தது. அங்கு ஒரு அசீரிரி தபசு செய்ய சொன்னது. தபசினால் தியானம்,பக்தி உண்டானது. பக்தியாய் இருந்ததால் தாமரை தண்டின் துவக்கத்தை கண்டுபிடிக்க முடிந்தது HOME 2 3 4 5 6 7 8

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

பன்னீர் இலை விபூதியின் மகிமை

இவர் கி.பி.8 ம் நூற்றூண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தார். அபிநவகுப்தன் என்னும் பகைவனால் வளர்க்கப் பெற்ற வேள்வியால் காசநோயால்  அவதிபட்டு வந்தார்  ஆதிசங்கரர் . எல்லா ஆலயங்களுக்கும் சென்று வந்தார்.அவருக்கு குணமாகவில்லை.பின்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு 48 நாட்கள் இலைவிபூதி உண்டார். அதனால் வயிற்று வலி  குணமானது. இன்றும் அங்கு  இலைவிபூதி கொடுக்கப்படுகிறது.அங்கு குகை கோயிலில் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு 33 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கம் பாடினார். "கண்டால்நின் இலைநீறு கைகால் வலிப்புக் காசம் கயம்குட்ட முதலாய நோயும் விண்டோடு மேபூத பைசாசம் யாவும் வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே" பாடல் எண்   --- 25 பன்னீரிலை விபூதியினால் கை கால்கள் வலிப்பு, காசநோய், குஷ்டம், வயிற்றில் வலி, பயம், பூத தொல்லை முதலியவற்றில் நிவர்த்தி அடையும். ஆதிசங்கரர் சிலை மூலவரின் எதிரில் ஒரு தூணில் உள்ளது.இதை காண வேண்டுமானால் தர்மதரிசன வழியாக சென்றால் ஒரு மர பெட்டி யால...