ஜலம், ஜலம் எங்கு பார்த்தாலும் ஜலமாக இருக்குது என்று சுத்தி பார்த்து எங்கிருந்து வந்தது என நினைக்கிறார். இவ்வளவு தண்ணீர் இருக்கிறது இங்கு இந்த ஒரு தாமரை எங்கிருந்து வந்தது. என்னுடைய வேலை என்ன என நினைத்தார். பின் யோசித்ததால் தனக்கு அகங்காரம் உண்டானது.அவர் தாமரையில் தோன்றியதால் தாமரை தண்டின் துவக்கத்தை கண்டுபிடிக்கச் சென்றார். நூறு வருடம் காலம் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அகங்காரம் அடங்கவில்லை.
தன்னுடைய ஆசைஅடங்கவில்லை இதனால் துக்கமாய் மாறியது. சிந்தை,ஆசை,நிராசை,துக்கம் தொடங்கி விகாரம் வேலியாய் வந்தது. அங்கு ஒரு அசீரிரி தபசு செய்ய சொன்னது. தபசினால் தியானம்,பக்தி உண்டானது. பக்தியாய் இருந்ததால் தாமரை தண்டின் துவக்கத்தை கண்டுபிடிக்க முடிந்தது
HOME | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
கருத்துகள்