சூரியன் தோன்றுதல்

               
     
                  சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.

                       அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்கும் என கூறினார்.

                     வினதா முட்டைகளில் ஒன்றை அவசரப்பட்டு உடைத்தாள் அதிலிருந்து  சரியாக வளராமல் சிதைந்த உருவத்துடன் வெளிப்பட்டவர்தான் சூரியன் ஆவார். அவர் தன் தாயை உன் அவசரத்தால் என்னை வளரவிடாமல் செய்து விட்டாய் அதனால் நீ சுய உருவத்தை இழப்பாய் என சாபமிட்டார். பின் சாப விமோசனமாக இரண்டாவது இருக்கும் முட்டையை உடைக்காமல் இருந்தால் அது நன்றாக பிறக்கும்.அந்த பிள்ளையால் அமிர்த தாரை பெய்யச் செய்தால் சுய உருவம் உண்டாகும் என்றார் சூரியன்.இரண்டாவது பிறக்கும் பிள்ளைதான் கருடன்.அவன் விஷ்ணுவின் பக்தனாகினான்.கத்ருவின் பிள்ளைகள் ஆதிசேஷன் , வாசுகி போன்ற நாகங்கள் உருவானது.

படங்கள் : கூகிள் நன்றி
                                                                                      
HOME12345678











கருத்துகள்