வாஸ்து பகவான் தோன்றிய கதை
அரக்க வம்சத்தில் தோன்றிய அண்டகாசூரன் சிவனிடம் தவமிருந்து சகாவரத்தினை கேட்டான். சிவன் மறுக்கவே உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் வரக்கூடாது என வரம் கேட்டான். சிவன் கொடுத்தார். வரத்தினை பெற்ற அண்டகாசூரன் மூவுலகங்களையும் அடக்கி கொடுமை படுத்தினான். சிவ வழிபாடு கொண்டதால் அவனை அழிக்கமுடியவில்லை.
நாரதர் அண்டகாசூரனிடம் சிவ நிந்தனை செய்ய வைத்தார். அதனால் சிவனுக்கு அவிர்பாகம் கொடுக்க கூடாது எனக்கே சேரவேண்டும் என்று சிவபக்தர்களை கொடுமை படுத்தினான். பின்னர் சிவனிடம் சென்று போருக்கு அழைத்தான். சிவனும் அண்டகாசூரனும் சண்டையிடும் போது சிவனிடமிருந்து விழுந்த வியர்வை துளியிலிருந்து ஒரு பூதம் உண்டானது.
அதனிடத்தில் பசி அதிகமாக உண்டானதால் இறந்து கிடக்கும் உடல்களை தின்ன சொன்னார் சிவன். அண்டகாசூரன் உடலை தின்னும் பசி அடங்கவில்லை. பூதம் சிவனிடம் தான் விரும்பியதையெல்லாம் உண்ண வரம் கேட்டது. சிவன் வரம் கொடுத்தார். கண்ணில் பட்ட அனைத்தையும் உண்டது. இதனால் பயந்த தேவர்கள் பூதத்தை பூமியில் வீழ்ந்து வணங்கினால் உண்ண நிறையகிடைக்கும் என சொன்னார்கள். அதன்படி பூதம் கீழே விழுந்த உடன் அனைத்து தெய்வங்களும் அதன் மேல் உட்கார்ந்தது.
பூதம் வலி தாங்கமுடியாமல் பிரம்மதேவனிடம் தன்னை காப்பாற்றும்படி கேட்டது. பிரம்ம உன்னுடைய கோரப்பசி தணிய பூமி பூஜை செய்து வீடு கட்டும் போது செய்யும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால் வீட்டில் உள்ளவரை வாட்டு என்று சொன்னார்.

கருத்துகள்