Skip to main content

Posts

Showing posts with the label விரதங்கள்

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறை

பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து மாலை குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து  தாமரை மலர் கோலமிட வேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். பால் பாயசம் வைப்பது விசேஷம். தங்களால் முடிந்த நெய்வேத்திய பொருட்களையும் வைத்து வழிபடலாம். நிலவை வணங்கி மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன் பித்ருக்களையும் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து போற்றி பாடல்களையும் படிக்க வேண்டும். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் நெய்வேத்திய பிரசாதத்தை அருகில் வசிப்பவரிடம் கொடுக்கலாம். பூஜை முடிந்த பின்ன...

48 நாள் கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்

தினம் காலை 4:30 மணிக்கு  எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் ஐயனை வணங்கி  உணவு உட்கொள்ள  வேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்ல வேண்டும்.  பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்த கூடாது. தரையில் தூய்மையான துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும். அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ அலங்காரம் செய்யவோ கூடாது. ஒரு மிக முக்கிய கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது.  மாலை அணியாதவர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும். பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். காலணிகளை அணியக்கூடாது. மணி...

நாக சதுர்த்தி விரதம்

பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசித் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் முனிவர் பரிசித்தின் மகன் யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். சாபநிவர்த்தி கிடைத்த நாளே நாக சதுர்த்தி தினம். நாகசதுர்த்தி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக்கடன்களையும், விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, சுத்தமான, உலர்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு, நாகபூஜை செய்ய வேண்டும். நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகர் சிலை இருக்கும். பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும். புற்றிருந்தால் முதலில் புற்றுக்கு கொஞ்சம் பாலை வார்க்க வேண்டும். அதன்பின் புற்றுக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் இடவேண்டும். நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து ...

கந்த சஷ்டி விரதம்

காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன்  மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே முருகன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.  சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தார். சிங்கமுகன் மற்றும் தாரகாசூரன் (யானைமுகன்) கொன்று கிரவுஞ்ச மலையையும் அழித்தார். பின்னர் சூரபத்மனுடன் போரிட்டார். அவன் முருகனின் விஸ்வரூபம் கண்டு தன்னை மன்னிக்க வேண்டி மாமரமாக நின்றான். முருகப் பெருமானும் அவனை மன்னித்து மாமரத்தை பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார். ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதாகும்.  ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்...

கேதார கௌரி விரதம்

பலரும் தீபாவளி என்றால் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் மேற்கொண்டால், நம்மை...

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்...

வரலட்சுமி விரதம் 

மகாலட்சுமி, பாற்கடலில்  அமிர்தம் கடையும் போது அவதரித்தவள். அவளின்அழகைக் கண்ட தேவர்கள் தங்களை திருமணம் செய்யுமாறு கூறினார்கள். அவர்களை மறுத்தாள. ஆமை வடிவம் எடுத்தார் பாற்கடலை கடைவதற்கு. அப்போது வாசுகியின் விஷத்தால் கறுத்து போயிருந்தார். அவரை பார்த்த லட்சுமி தேவி தன்னை திருமணம் செய்யுமாறு கூறினாள். மறுத்த அவர் அங்கிருந்து சென்றார். அவர் செல்லும் வழியே எள்ளு செடியாக முளைத்தாள் லட்சுமி. அதை மிதித்த விஷ்ணுவிடம் எண்ணெயாக  மாறி அவருடன் கலந்தார். விஷ்ணுலை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழக...

லட்சுமி விரதம் பூஜை முறை

பூஜைக்குத் தேவையானவை :  மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள்: பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.  பழ வகைகள்: ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...  பூஜைக்கான முன்னேற்பாடுகள்: வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, பு...

காரடையான் நோன்பு

                       மாசி மாதத்தில் உபநயனம் செய்வதும் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வதும்சகல பாக்கியத்தை கொடுப்பதாகும்.மாசி கயிறு பாசி படரும் (விருத்தியாகும்).பார்வதி தேவி ஒரு சமயம் ஏகாம்பர நாதனை காஞ்சியில் பூஜை செய்தாள்.                        அதனால் பரமேஸ்வரன் பார்வதியை விட்டு ஒரு நிமிடமும் பிரியாமல் இருந்தார்.அது போலவே பெண்கள் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரியாமலும், கணவர் நீண்ட ஆயுளுடனும் இருக்க இந்த விரத்தை மேற்கொள்ளலாம். அந்த தினத்தில் விரதம் இருப்பது காரடை நோன்பு அல்லது காமாக்ஷி விரதம் ஆகும்.                             கார் அரிசியை கொண்டு மாவாக்கி புதியதாக விளைந்த துவரையுடன் அடை போல் தட்டி அதில் காமாக்ஷியை ஆவாகனம் செய்து நோன்பு கையிற்றை அதன் மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அந்த காமாக்ஷி நோன்பு கையிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.

சங்கடஹரசதுர்த்தி விரதம்

                                  சங்கடஹரசதுர்த்தி விரதம் என்பது தேய்பிறையில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம் என்பதாகும். துன்பங்கள் நீங்குவதற்கு சங்கரஹரசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம் சங்கடங்கள்,நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகிறோம். சங்கடஹர கணபதியைவணங்கியவர்களில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.                                    சந்திரனும் கணபதியை சிறப்பாக வழிபட்டு அவருடைய நெற்றியில் முழு நிலவு திலகமாக விளங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று சந்திரனையும் வணங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று விடியும் முன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து கணபதியை வழிபட வேண்டும். அன்று இரவு சந்திரனை பார்த்துவிட்டு அவரை மனதில் தியானித்து இரவு உணவு உட்கொள்ளவும்.                           ...