Skip to main content

Posts

Showing posts with the label மணிகண்டன்

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது  அந்த 18 கருவிகள் வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும் பதினெட்டுப் படிகளை இந்திரியங்கள் ஐந்து ( 5 ) புலன்கள் ஐந்து ( 5 ) கோசங்கள் ஐந்து ( 5 ) குணங்கள் மூன்று ( 3 ) என்று கூறுகிறார்கள் அவை முறையே இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) : கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள் புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் )  பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் )  அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் )  ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, ச...

புலி குன்னூர் புலி கொன்று குருநாதன் முகடி

புலி குன்னூர் (புலி குன்று) பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும் பின்னர் அந்த புலிகளை திரும்பக் கொண்டு சென்று விட்ட போது ஒரு புலி இந்திரன் ஆகவும் ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம் தான் இந்த புலி குன்னூர். மணிகண்டன் புலியுடன் வந்து கீழே இறங்கிய போது அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பது இந்த ஸ்தத்தின் சிறப்பு ஆகும். குருநாதன் முகடி குன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குருநாதன் ஐயப்பன் குருகுலத்தில் படித்து பல வித்தைகளை கற்றுக் கொண்ட இடம். முக்கியமாக குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது உண்மை. மணிகண்டனுக்கு கல்வி கற்று தருவதற்காகவே அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை. புஷ் கலையை மணமுடித்த  சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி பகவதி அம்மனாக பத்ரகாளி வடிவத்தில் காட்சி தருகிறார்.

ஐய்யப்பனின் பெயர்கள்

sastha மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன், தர்மசாஸ்தா, எருமேலிவாசன், ஹரிஹரசுதன், ஹரிஹரன், கலியுகவரதன், கருணாசாகர், லட்சுமண, பிராணதத்தா, பந்தளவாசன், பம்பாவாசன், ராஜசேகரன், சபரி, சபரீஷ், சபரீஷ்வரன், சபரி, கிரீஷ், சாஸ்தா,வீரமணி