Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது 
அந்த 18 கருவிகள்

வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம்

ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்

பதினெட்டுப் படிகளை

இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )

என்று கூறுகிறார்கள் அவை முறையே

இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :

கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள்

புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) 

பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்

கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) 

அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம்

குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) 

ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்

இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்

18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்

மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர, ஸத்ய, தாமஸ, ராஜஸ

என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்

கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்

18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்

ஒன்றாம் திருப்படி - சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி - சிவன்
மூன்றாம் திருப்படி - சந்திர பகவான்
நான்காம் திருப்படி - பராசக்தி
ஐந்தாம் திருப்படி 
அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி 
முருகன்
ஏழாம் திருப்படி 
 புத பகவான்
எட்டாம் திருப்படி 
விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி 
வியாழ ( குரு ) பகவான்
பத்தாம் திருப்படி 
பிரம்மா
பதினொராம் திருப்படி 
சுக்கிர பகவான்
பனிரெண்டாம்திருப்படி 
 இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி 
சனி பகவான்
பதிநான்காம் திருப்படி 
எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி 
இராகு பகவான்
பதினாறாம் திருப்படி 
சரஸ்வதி
பதினேழாம் திருப்படி 
கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி 
விநாயகப் பெருமான்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...