Skip to main content

Posts

Showing posts with the label கோவில்

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது  அந்த 18 கருவிகள் வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும் பதினெட்டுப் படிகளை இந்திரியங்கள் ஐந்து ( 5 ) புலன்கள் ஐந்து ( 5 ) கோசங்கள் ஐந்து ( 5 ) குணங்கள் மூன்று ( 3 ) என்று கூறுகிறார்கள் அவை முறையே இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) : கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள் புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் )  பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் )  அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் )  ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, ச...

புலி குன்னூர் புலி கொன்று குருநாதன் முகடி

புலி குன்னூர் (புலி குன்று) பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும் பின்னர் அந்த புலிகளை திரும்பக் கொண்டு சென்று விட்ட போது ஒரு புலி இந்திரன் ஆகவும் ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம் தான் இந்த புலி குன்னூர். மணிகண்டன் புலியுடன் வந்து கீழே இறங்கிய போது அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பது இந்த ஸ்தத்தின் சிறப்பு ஆகும். குருநாதன் முகடி குன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குருநாதன் ஐயப்பன் குருகுலத்தில் படித்து பல வித்தைகளை கற்றுக் கொண்ட இடம். முக்கியமாக குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது உண்மை. மணிகண்டனுக்கு கல்வி கற்று தருவதற்காகவே அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை. புஷ் கலையை மணமுடித்த  சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி பகவதி அம்மனாக பத்ரகாளி வடிவத்தில் காட்சி தருகிறார்.

மூல நட்சத்திரக்காரர்களின் திருமண தடை நீக்கும் கோவில்

ஆம்ரவனேஸ்வரர் கோவில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் ஸ்தலம். இங்கு அர்ச்சனை செய்தால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆம்ரவனேஸ்வரர் கோவில். இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது, இறைவன் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி குறைவில்லாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்.  இவ்வாலயம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவர்கள் இத்தலத்தில் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்து வந்தால், அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இக்கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், கல்வியில் மேன்மை பெறவும், வாழ்க்கையில் உள்ள தீராத இன்னல்கள் தீங்கவும், செய்யும் தொழில் மேன்மை அடையவும், மூல நட்சத்திரத்தி...

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

சுருட்டப்பள்ளி, சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.ஆனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார்.  விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.  அப்பொழுது, எல்லோரும் கர்ப்பக்கிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாகத் தரிசிக்கலாம். சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்துத் தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மற்ற எந்தச் சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இருக்கும் இவரை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்வுலகைக் காப்பதற்காக அமிர்தத்தைக் கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனைச் ...