
ராமனின் வனவாசத்தின் போது தன் தந்தை தசரத சக்ரவர்த்திக்கு சிரார்த்தம் செய்வதற்கு காட்டில் உள்ள பழங்களை பறிக்கச் சென்றார். உடன் லட்சுமணன் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சிரார்த்தத்தை பெறுவதற்காக தசரத சக்ரவர்த்தி வந்தார். அவர் சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைக்குமாறு சீதா தேவியிடம் சொன்னார்.
அதற்கு சீதா தேவி ராமன்தான் சிரார்த்தம் பண்ணமுடியும் நான் பெண் என்பதால் செய்ய இயலாது என்றாள். ஆனால் தசரத சக்ரவர்த்தியோ சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைத்தால் மட்டுமே என்னால் பெறமுடியும் என்றார். அதற்க்கு சாட்சியாக யாரையாவது வைத்துக் கொள் என்றார்.

அவர் சொன்னதால் பசு, அக்னி, தாழம்பூ போன்றவற்றை சாட்சியாக வைத்து பழத்தினை வேகவைத்து மாவாக்கி தர்பன உணவுகளை படைத்தாள் தசரத சக்ரவர்த்தி சுவர்க்கலோகம் திரும்பினார். காலதாமதமாக வந்த ராமன் சீதா தேவியிடம் விரைவாக சிரார்த்த உணவுகளை படைக்குமாறு சொன்னார்.அதற்க்கு சீதா தேவி ஏற்கனவே சிரார்த்தம் செய்து விட்டதாகவும் சாட்சியாக பசு, அக்னி, தாழம்பூ ஆகிய மூன்றும் உள்ளதாக சொன்னாள்.
பசு, அக்னி, தாழம்பூ இவர்களிடம் ராமன் கேட்டதற்கு தங்களுக்கு
எதுவும் தெரியாதது போல் ராமனுக்கு பயந்து மௌனமாக இருந்து விட்டது. ராமன் தன மனைவியிடம் ஏதும் சொல்லாமல் தந்தை தசரத சக்ரவர்த்திக்கு சிரார்த்தம் செய்வதற்கு நதியில் இறங்கினர் அப்போது தசரத சக்ரவர்த்தி நான் சீதா தேவியிடம் சிரார்த்தம் வாங்கியதாக சொன்னார். பின் ராமனுக்கு சீதை மிது உள்ள கோபம் தணிந்தது.

சீதா தேவி அந்த நேரம் மௌனமாக இருந்த பசுவிடம் உண்மையை மறைத்ததால் உன் முகத்தில் வாசம் செய்யும் லக்ஷ்மி தேவி பின்பக்கம் செல்வாள் எனவும், அக்னியிடம் நீ சுத்தம், அசுத்தம் என பாராமல் எல்லா இடத்திலும் பரவுவாய் எனவும், தாழம்பூவிடம் நான் சிவனுக்கு உன்னை அர்ச்சனைக்கு பயன்படுத்தியதால் நீயும் நீதி தவறி விட்டதால் இனி சிவனுக்கு பயன்பட மாட்டாய் என சாபமிட்டாள். அதனால் தான் பசுவின் பின்பக்கத்தை வணங்குகிறோம்.
படங்கள் : கூகிள் நன்றி
கருத்துகள்