பெயர்காரணம் : முவேந்தர்களான சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் வரி வசூல் செய்ய காற்றோட்டமான இடத்தை தேர்ந்தெடுக்க சென்றனர். அப்போது நல்ல இடம் கிடைத்தது.அந்த இடத்தில் பந்தல் அமைத்து வரி வசூல் செய்தனர்.அதுவே காலப்போக்கில் முப்பந்தல் என மாறியது என்று செவி வழிச் செய்தியானது.
சிறு குழந்தைகள் மண்ணில் அம்மன் சிலைபோல் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். பின் அந்த மண்ணை அப்படியே வைத்து விட்டு சென்றனர். மறுநாள் அந்த இடத்தில் ஒருவரின் கால் தட்டியது என்ன என்று பார்க்கும் போது அங்கு வந்த ஒருவருக்கு சாமி வந்து நான் இந்தஇடத்தில் இருக்கிறேன் என்று கூறினர். அந்த இடத்தில் ஒரு கல்லை வைத்து வணங்கினர்.
கோவிலின் பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்கு தொடர்ந்த வயிற்றுவலியால் கவலையடைந்தார்.அவரது பேத்தி கனவில் வந்த இசக்கியம்மன் முப்பந்தல்
மரத்திற்க்கு கீழே நான் இருக்கிறேன் என கூறியது.அங்கு சென்று பாத்தபோது ஒரு கல்லில் வெற்றிலை இடித்த கரை அதையே சிலையாக்கி கோவிலாக்கினர்.
மரத்திற்க்கு கீழே நான் இருக்கிறேன் என கூறியது.அங்கு சென்று பாத்தபோது ஒரு கல்லில் வெற்றிலை இடித்த கரை அதையே சிலையாக்கி கோவிலாக்கினர்.
இன்றும் இங்கு மக்கள் கூட்டம் நிறைய வருகிறார்கள். செவ்வாய்,வெள்ளியன்று மட்டுமில்லாது தினமும் கூட்டம் அதிகமாக வருகிறார்கள்.பௌர்ணமியன்று பூஜை செய்தால் பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வருகிறார்கள் அவர்களுக்கு குழந்தை கிடைக்கிறது. பின்னர் சர்க்கரை பொங்கல் வைத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
இடம் : நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழைகிற சின்ன கிராமம் முப்பந்தல் ஆகும்.
கருத்துகள்