ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் கொண்டு செல்லும் போது வீ ட்டினில் ஏற்படும் சகுனங்களை பார்க்கவும். செல்வதற்கு முன்பு தும்மல் வந்தாலோ அல்லது ஒருவர் நீர் அருந்திவிட்டு செல்லவும் என கூறினாலும் அபசகுனமாகும். பொருத்தம் பார்பவரிடம் இந்த வரன்கள் நல்ல வசதியாய் உள்ளனர் என சொல்ல வேண்டாம்.
ராசி பொருத்தம் , நட்சத்திர பொருத்தம். வேதை பொருத்தம், யோனி பொருத்தம், தினப் பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், மகேந்திர பொருத்தம், நாடி பொருத்தம், கண பொருத்தம், செவ்வாய் தோஷம் இருக்கிறதா என பர்ர்க்கவும். பத்து பொருத்தம் பார்ப்பது மட்டும் போதாது.
லக்னாதிபதி நட்பாக இருந்தால் மட்டுமே ஒற்றுமையாக இருக்கமுடியும். லக்னத்தில் ராகு உள்ளவர் லக்னத்தில் கேது உள்ளவரை திருமணம் செய்யாமல் இருப்பது நலம். லக்னத்தில் கேது உள்ளவர் லக்னத்தில் ராகு உள்ளவரை திருமணம் செய்யாமல் இருப்பது நலம். இவ்வாறு இருந்தால் கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு உண்டாக்கலாம். மணப்பொருத்தம் என்பது சந்திரன் நிற்கும் நிலையை வைத்து சொல்வது. மணமக்களுக்கு ஒருவருக்கு சந்திரன் நிற்கும் இடம் மற்றவருக்கு சந்திரன் 6,8,12-ல் இல்லாமல் இருப்பது நலம்.
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ வியாழநோக்கு (குருவின் பார்வை) இருக்கும் பொது திருமணம் செய்யலாம்.சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் புத்தி நடக்கும் சமயத்தில் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். ஒரே ராசியிலோ அல்லது ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
மாங்கல்யத்தை மஞ்சள் நிறக் கயிற்றால் கட்டுதல் சிறப்பாகும். கோவிலில் திருமணம் செய்தாலே தோஷங்கள் நிவர்த்தியாகலாம்.

Comments