வீட்டில் தனது மனைவி மற்றும் மூத்த மகனின் பெயரை சொல்லக் கூடாது. மனைவிக்கு துணைப் பெயரோ அல்லது அம்மா என்றுதான் சொல்லவேண்டும். தாய்க்குப் பின் தாரம் (மனைவி) என்று பெரியவர்கள் கூறுவது உண்டு.அவ மரியாதையாகப் பேசுபவர்கள் அடுத்த ஜென்மாவில் கொடுமையான கணவன் கிடைப்பார்.
குழந்தைகளை வாய்க்கு வந்தபடி திட்டுபவன் அடுத்த ஜென்மாவில் குழந்தைகள் இல்லாமலும் மூர்க்கத் தனமாகவும் ஆதரவும் இன்றி திரிவான்.தாய்,தந்தையரை மதிக்கத் தவறுபவன் ,சகோதரன் துன்பப்படுவதை கண்டு மனம் இரங்காதவன் உற்றார், உறவினரின் வேதனையை கண்டு ரசிப்பவன் ஆதரவின்றி அல்லல் படுவான்.
ஒரு பெண் கர்பவதியாக இருக்கும் சமயத்தில் அவளுக்கு நல்ல வார்த்தைகளை கேட்கும்படியாகவும், அமைதியான சூழலையும் கொடுக்க வேண்டும் இல்லைஎன்றால் குழந்தை தாய் தந்தையை மதிக்கத் தவறுவார்கள்.
பெண்கள் தங்கள் கணவரின் பெயரையும் சொல்லாமல் இருக்கலாம். கணவன் மனைவி இருவருக்கும் அன்பும் பாசமும் இருந்தால் குழந்தைகளும் அவ்வாறே வளரும். அவர்களின் மனநிலை தங்களால் மட்டுமே மாறலாம்.

Comments