நகுச மன்னனுக்கு சாபம்

               

பண்டைய காலத்தில் நகுச மன்னன் ஆட்சி செய்தான். அவன் நல்ல குணம், நல்ல பக்தி,மக்கள் மீது அன்பும் , குரு பக்தி, தெய்வ பக்தி உள்ளவன். அஸ்வமேத யாகம் பல செய்து நல்ல புண்ணியம் பெற்றிருந்தான்.

                    ஒருநாள் விருத்தா சூரன் என்ற அரக்கன் பூலோகம், சுவர்கலோகம் போன்றவற்றை ஆக்ரமித்தான். கண்ணில் கண்ட அனைவரையும் கொடுமைப் படுத்தினான். இந்திரலோகத்திலும் சென்று அங்கும் கொடுமைப் படுத்தினான். இவனுக்குப் பயந்து இந்திரன் இந்திரலோகத்தை விட்டு தாமரை தண்டின் உள்ளே சென்று தவம் மேற்கொண்டான்.

                   அப்போது இந்திரலோகத்தில் இந்திரன் இல்லாததால் இந்திர லோகமே கவலையில் ஆழ்ந்தது. நகுச மன்னனையே ஆட்சி பொறுப்பில் அமர்த்த தேவர்கள் எண்ணினர்.நகுச மன்னன் அங்குள்ள ஐஸ்வர்யம், பொன், பொருள், நடனமங்கைகள் எல்லாம் தனக்கு உரிமை கொண்டாடினான். இந்திராணியையும் தனக்கு வேண்டும் என்று அவளிடம் கேட்டான். அவள் மறுத்து தேவகுரு பிரகஸ்பதியிடம் தன்னை காப்பாற்றும் படி வேண்டினாள். அவர் நகுச மன்னனை அழைத்து இது தவறு என சுட்டி காட்டினார்.

                   நகுச மன்னன் அதை கேட்கவில்லை. தேவகுரு இந்திராணியிடம் குரு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கை குரு முனிவர்களே உன்னை சுமந்து வந்தால் ஏற்றுக் கொள்வதாக சொல்லச் சொன்னார். அதன்படி இந்திராணி சொல்ல நகுச மன்னன் குரு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கை குரு முனிவர்களே சுமக்க சொன்னான். இவன் இந்திரலோகத்தை ஆட்சி செய்வதால் குரு முனிவர்கள் பதில் சொல்லாமல் சுமந்தனர்.

                    அப்போது குரு முனிவர்கள் பல்லக்கை சுமந்து வரும் வழியில் நகுச மன்னன் சர்ப்ப, சர்ப்ப (வேகமாக, வேகமாக) என சொன்னான். திரும்ப திரும்ப சர்ப்ப, சர்ப்ப (வேகமாக, வேகமாக) என சொன்னான். இதை கேட்ட அகஸ்தியருக்கு கோபம் வந்தது. சர்ப்ப, சர்ப்ப என சொன்னதால் சர்ப்பமாக கொடுங்காட்டில் அலைவாய் என சாபமிடுகிறார்.

                    நகுச மன்னன் பல்லக்கிலிருந்து இறங்கி தன்னை மன்னிக்குமாறு கேட்கவே அகஸ்தியர் துவாபர யுகத்தில் தர்ம புத்திரனை பார்க்கும் போது பூர்வ ரூபம் கிடைக்கும் என சொல்கிறார்.பாண்டவர்களின் வனவாச காலத்தில்  ஹிமாலயத்தி பிரதேசத்தில் வசித்து வந்த பீமன் அங்கு வரும்போது நகுச மன்னனான சர்ப்பம் பீமனை ஆக்கிரமித்தது. பீமனை தேடி தருமர் வரும் போது நகுச மன்னனான சர்ப்பம் பீமனை பிடித்து வைத்ததை பார்த்து கோபம் கொள்கிறார்.தருமரிடம் அகஸ்தியர் கொடுத்த சாபத்தை பற்றியும் அது உன்னால் தீரும் என சொன்னதை கேட்டவுடன் தருமர் கோபம் தணிந்தது. சாபவிமோசனம் பெறுகிறார் நகுச மன்னன்.

                       நகுச மன்னன் சர்ப்பமாக மாறிய பின் இந்திரன் தாமரை தண்டிலிருந்து வெளியே வந்து அஸ்வமேத யாகம் நடத்தி இந்திரலோகத்தை ஆட்சி செய்கிறார்.

                      ஒருநாள் சகஸ்ராபாத் அக்னி கோத்திர சமயத்தில் புல்லால் சர்ப்பம் செய்து தன் நண்பன் ககமனிடம் காட்டி பயமுறுத்துகிறான். ககமன் சகஸ்ராபாத்தை நீ சர்ப்பமாக மாருவாய் என சாபமிடுகிறான். சகஸ்ராபாத் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கேட்கிறான். பிரமதீ புத்திரன் ருரு தரிசனம் கிடைத்த பின் சுய உருவம் கிட்டும் என சொன்னான் ககமன். ருருவின் மனைவி சர்ப்பம் தீண்டி இறக்கிறாள் அதனால் சர்ப்பத்தை கண்ட உடன் கொல்கிறார். பின்னர் சகஸ்ராபாத்தை கண்டவுடன் கொல்ல நினைக்கும் போது சாப விமோசனம் அடைகிறார். ருருவிடம் சர்ப்பத்தை கொல்ல வேண்டாம் என சொல்லி சர்ப்பத்தை ருரு பாதுகாக்கிறார்.

கருத்துகள்