மனிதனின் வல்வினை தீர்மானிப்பவை நவகிரகங்கள் ஆகும். நாம் செய்யும் அன்றாட நன்மை, தீமைகளை இந்த ஜென்மத்திலும், அடுத்த ஜென்மத்திலும், முந்தைய ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்தும் நன்மை, தீமைகளை கிடைக்க செய்வார்கள்.மக்களின் மனதை ஆட்சி செய்ய இறைவனால் நியமிக்கப்பட்டவை. இப்பிரபஞ்சம் நெருப்புக் கோளத்திலிருந்து சிதறிய கோள்கள் பல உள்ளன. அவற்றில் பூமியின் மீது ஏழு கிரகங்கள் மற்றும் வட, தென் துருவங்களில் வெட்டிக் கொள்கின்ற ஒளிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
படைக்கும் தொழிலுக்கு உதவியாக பிரம்மா - மரீசி, புலஸ்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரசர், புவனகர், வசிஷ்டர் ஆகிய சப்த ரிஷிகளை படைத்தார். இதில் முதலாமவரான மரீசியின் புதல்வரான காசிபருக்கு பிறந்தவரே சூரியன். அத்திரி மகரிஷிக்கு புதல்வர் சந்திரன் ஆவார். சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் பிறந்தவரே புதன் ஆவார். ஆங்கிரசாருக்கு தேவ குருவான பிரகஸ்பதி புதல்வர் ஆவார். வசிஷ்டருக்கு செவ்வாயும் , சூரியனுக்கும் சூரியனின் மனைவி சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவரே தர்ம நெறிபிரலாத சனீச்வர பகவான் ஆவார்
சூரியனின் தந்தை காசிபருக்கு அசுர மனைவிவாயிலாக பிறந்தவரே சுவர்பானு.அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தார் விஷ்ணு. அப்பொழுது சூரிய, சந்திரர்களுக்கு இடையே தேவ வடிவில் சுவர்பானு அமிர்தத்தை உண்டார். இதை கவனித்த சூரிய, சந்திரர் விஷ்ணுவிடம் சொல்லுகின்றனர்.
உடனே விஷ்ணு சுவர்பானுவை கரண்டியால் தட்டுகிறார். அமிர்தம் உண்டதால் தலை வேறு முண்டம் வேறாக பிரிந்து பூமியை சுற்றுகின்றன. பின்னர் தன் மௌன மொழியால் பிரம்மனை வணங்கி உயிர் பிச்சை கேட்கின்றன. அவர் பிரிந்த உடலை இணைக்க முடியாது என கூறி தலையுடன் பாம்பின் உடலையும், உடலுடன் பாம்பின் தலையும் இணைத்து நவகிரகங்களாக செய்கிறார்.
அவற்றிற்கு ராகு, கேது என பெயரிட்டு அசுர ஆதிக்கம் முடிந்தபின் உங்கள் செயல் நடைபெறும் என்றார். இவ்விரு கிரகமும் வலமிருந்து இடமாக சுற்றுகின்றன. சூரிய, சந்திரர் காட்டி கொடுத்தால் இருவரையும் சூரிய, சந்திர கிரகனங்களாக சில மணி நேரம் செயல் இழக்க செய்கின்றது.
.
கருத்துகள்