கேரளத்திலுள்ள சர்ப்ப ஆலயம் ஆம இடக்காவு. பண்டைய காலத்தில் பரசுராமர் ஆம இடக்காவுக்கு வந்தார். ஆமைக்கு மேல் நாககன்னிகள் இருப்பதை கண்டார். நாககன்னியை ஆமையின் மீது இருந்து இறங்கி செல்லச் சொன்னார் பரசுராமர். நாககன்னிகள் ஆமையை விட்டு கீழே இறங்கி சென்றபின் ஆமை அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கயே நின்றது.
ஆமையையும், நாககன்னிகளையும் அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் பரசுராமர். அந்த இடமே ஆம இடக்காவு என பெயர் பெற்றது. பின்னர் அங்கே பிராமணரை அழைத்து பூஜை செய்தார். நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பூஜை செய்தால் நல்லதே நடக்கும் என்றார். அந்த வம்சத்தில் வந்தவர்களே இன்றும் பூஜை செய்கின்றனர்.
இங்கே நாக பூஜை பிரசித்தி பெற்றது.காவுகளும் (சர்ப்பம்), காவு விருட்சங்களும் உள்ளன. இவற்றை ஒரு பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்தார் பரசுராமர். இங்கே சர்ப்ப தோஷத்திற்கு நாக நீக்கல் வழிபாடு உண்டு.ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜா நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று ஒரு மண்டலம் முடிவதாக வைத்து அதற்கு முந்தைய 41 நாட்களிலிருந்து மண்டல பூஜை நடைபெறும். ராகு தோஷம், சர்ப்ப தோஷம் (கோபம்), உள்ளவருக்கு அத்தால பூஜை (இரவு பூஜை) நடைபெறும்.
இங்கு ஆராதனை, வழிபாடு நடத்த நல்ல சவுகரியமாக இருக்கிறது. சில ஸ்தலங்களில் திருப்புன்னித்துறை, வேலர் வட்டம், அம்பலப்புழை சர்ப்ப கவுகளும்,சர்ப்ப சிலைகளும் இருக்கும். இங்கு கோவிலில் தரிசனம் செய்த பின் சர்ப்ப பாட்டு படித்து வழிபாடு நடக்கும். பால், சர்ப்ப பலி உண்டு. அம்பலப்புழை அருகே வண்டானத்து காவு நல்ல சர்ப்ப தோஷம் (கோபம்) நிவர்த்தி ஆலயம். ராமதேவன் சுமித்திரன் உடன் பரிசிலில் வரும் போது இந்த இடத்தில் யாரோ பரிசல் நிறுத்தியது போல் நின்றது.
அங்கு இறங்கிப் பார்த்த போது ஏழு நாககன்னிகள் விளையாடியது. அங்கு நாககன்னிகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தார். இப்பொழுதும் வருஷத்தில் ஏழு நாள் தொடர்ச்சியாக பாட்டும் துள்ளலும் நடத்தி சர்ப்பத்தை வரவழைப்பார். பின் பூஜை செய்வார். ஆலப்புழைக்கு அடுத்து உள்ள புலவன்மார்கள் களபம் (படம்) வரைந்து வழிபடுவர். சர்ப்ப பலி கொடுத்து பூஜை முடிப்பார்.கேரளத்தில் எராளமான சர்ப்ப காவுகளும் ஆராதன கோவில்களும் அவரவர் வம்ச வழியினர் பூஜை செய்வர்.
சில நேரத்தில் நம் கண்ணில் படும் அல்லது வீட்டில் வரும் போது அதை துன்புருத்துவோம். அதனால் சர்ப்ப தோஷம் வரும்.நாம் ஆராதனை செய்தால் தோஷம் வராது.

Comments