Skip to main content

Posts

Showing posts from April, 2020

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சங்கு பூஜை செய்யும் முறை

சங்கு பூஜை செய்வதற்கு காலையில் குளித்து விட்டு வலம்புரி சங்கை சுத்தமான நீரில் கழுவவேண்டும். மஞ்சள், பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பஞ்சகவ்யம் ,பால்  வைத்து அபிஷேகம் செய்யவும். சங்கில் மஞ்சள் கலந்த நீரை எடுத்து  விநாயகர் சிலை மீது ஊற்றி ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே  பாவ மானாய த்மஹி  தந்நோ சங்க ப்ரசோதயாத் . சொல்லவும். பின்னர் குபேர லட்சுமி படத்தின் அருகில் வைத்து  ஓம் குபேராய நமஹ ஓம்  லட்சுமி தேவி நமஹ என பதினோரு முறை கூறவும். இவ்வாறு 48 நாட்கள் சொல்லவும். வாசனை மலர்கள் கிடைத்தால் பூஜைக்கு பயன்படுத்தவும்.

சங்கு தோன்றியது எப்படி

தேவர்கள் அசுரர்களை விட வலிமையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அசுரர்களிடம் போரிட்டு தோல்வியை தழுவினார். இதனால் விஷ்ணுவிடம் சென்று நாங்கள் வெற்றி அடைய வழி சொல்லுமாறு வேண்டினார்கள். அதற்கு பாற்கடலை கடைந்தால் அதில் வரும் ஆயுதங்களை வைத்து வெல்லலாம் என்றார் விஷ்ணு. ஆனால் பாற்கடலை கடைவது எளிதல்ல.  உங்களுடன் அசுரர்களும் இணைந்து கடைய வேண்டும் அவ்வாறு செய்யும் போது அமிர்தம் வெளியவரும் அதை நீங்கள் அவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விடுங்கள் என்றார் விஷ்ணு. அவ்வாறு அசுரர்களுடன் கடையும் போது பதினாறுவகையான பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் திருமகளும் வலம்புரி சங்கும் வந்தது. திருமால் இரண்டையும் ஏற்று கொண்டார். வலம்புரி சங்கு என்கிற கடல்வாழ் உயிரியின் எலும்பு கூடு ஆகும். சங்கின் உள்ளே அந்த உயிர் இருக்கும். சங்கு பூஜை செய்தல் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். வாஸ்து குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டு காலையில் வீட்டில் தெளித்தால் குறைகள் நீங்கும். புது வீடு காட்டும் போது ஏழு வெள்ளிக்கிழமைகளில் காலை 06:00 - 07:00 குபேர லட்சுமி பூஜ...

முதலில் தோன்றிய அரக்கர்கள்

ஆதிசேஷன் மேலே விஷ்ணு படுத்திருந்து யோக நித்திரை செய்தார். அவர் பிரம்மாவின் அகங்காரம் அழிக்க நினைத்தார். தன் காதில் கைகளை விட்டு அழுத்தினார் அப்பொழுது வலது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து மது என்ற அரக்கன் தோன்றினான். இடது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து கைடவன் என்ற அரக்கன் தோன்றினான். இரு அரக்கர்களும் பயங்கர தோற்றத்தில் இருந்தனர். இருவரும் தண்ணீரில் குதித்து குதித்து அட்டகாசம் செய்தனர். இருவரும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள எண்ணினார். அப்பொழுது வானில் ஓர் அசரீரி கண்களை மூடி கொண்டு தேவியை நினைத்து தவம் செய் என்றது. அவர்கள் இருவரும் அமைதியாக பல வருடங்கள் தவம் இருந்தனர், தவத்திற்கு வரம் கொடுக்க எண்ணி தேவி தோன்றினாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் தேவி. அரக்கர்கள் இருவரும் எங்களை எவராலும் தோற்கடிக்க கூடாது மற்றும் நாங்கள் நினைத்தாள் மட்டுமே மரணம் வர வேண்டும் என்றார்கள். உடனே வரம் கொடுத்த தேவி மது கையில் சூலமும் கைடவன் கையில் வேலும் கொடுத்து இது உங்கள் கையில் இருக்கும் வரை உங்களுக்கு அழிவு வராது என்றாள் தேவி. ஒரு நாள் தண்ணீ...

மரணப்பிடியில் தப்பித்தவன் இவனே

மந்திர தேசத்தில் அஸ்வபதி என்ற மன்னன் நல்ல ஆட்சி செய்துவந்தான். தனக்கு குழந்தை இல்லாத காரணத்தின் சரஸ்வதியை நினைத்து தவம் செய்தான். அவனுக்கு சரஸ்வதி குழந்தை வரம் கொடுத்தாள். பெண் குழந்தை பிறந்தது.சாவித்திரி என்று பெயரிட்டான். அவள் வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அவளுக்கு திருமணம்  செய்ய நினைத்து நாரத முனிவரிடம் கூறினான். ஆனால் அவர் சத்தியவதி சாலவதேச மன்னன் சத்தியவானை விரும்புவதை கூறினார். ஆனால் அவன் ஆயுட்காலம் ஓராண்டுமட்டும் என்றார். அவனின் தந்தை தன் பகைவர்களிடம் நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வனவாசத்தில்  மனைவியுடன் இருவரும் கண் பார்வையில்லாமல் சத்யவானுடன் வாழ்ந்து வருகின்றனர். அசுவபதி மன்னன் தன் மகளிடம் வேறு ஒருவரை திருமணம் செய்து வைப்பதாக கூறினான். சாவித்ரி சத்தியவானை தவிர வேறு யாரையும் மணம் செய்ய மாட்டேன் என்றாள். அப்போது நாரதர் உன் மகள் கற்புநெறி தவறாதவள் அதனால் தன் கணவனை காப்பாற்றிக்கொள்வாள் என்றார். அசுவபதி மன்னன் சாலவ மன்னனிடம் இதை தெரிவித்தான். நாட்டிலைந்ததால் சாலவ மன்னன் வருத்தப்பட்டான். அவனை சமாதானபடுத்தி திருமணம் செய்துவைத்தார்கள். சாவித்திரி கணவனுக்கு பணி...

கருங்கல்லில் சிலை வைப்பதின் இரகசியம்

ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும். சிலைகளை அமைக்கும்  பற்றி பழமையான வேதமான ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது பஞ்சலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு, பதநீர்  கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும். தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும். பெரும்பாலும் மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும். ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைத்தார்கள். மலைக்காடுகளில் சுற்றி எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது. கற்களில் இறை வடிவங்களை செதுக்க ஆரம்பித்தனர். கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும். பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று  ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது. கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது. ...

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

சுவாமி கோபுரம் - 1168 முதல்  1175 வரை ராஜ கோபுரம்       - 1216 முதல் 1238 வரை அம்மன் சந்நிதி கோபுரம் - 1627 முதல் 1628 வரை மேற்கு ராஜா கோபுரம் - 1315 முதல் 1347 வரை சுவாமி சந்நிதி கோபுரம் - 1372 முதல் சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் - 1374   ஆறு கால் மண்டபம் - 1452 100 கால் மண்டபம் - 1526 சௌத் ராஜா கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்- 1559  சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் - 1560 தேரடி மண்டபம் - 1562 வன்னியடி நட்ராஜர் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபம் - 1563  வடக்கு ராஜா கோபுரம் - 1564 முதல் 1572 வரை வெள்ளி அம்பல மண்டபம்,  கொலு மண்டபம் - 1564 முதல் 1572 வரை  சித்ர கோபுரம் , ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் - 1569 அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம் - 1570  வீர வசந்தராயர் மண்டபம் - 1611   இருட்டு மண்டபம் - 1613  கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் - 1623 ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் - 1623 முதல் 1659 வரை புது மண்டபம் 1626 முதல் 1645 வரை நகரா மண்டபம் - ...

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது

பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன். மணிகண்டன் இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், கம்பு, சிலம்பம், களரி, வில், வாள் வித்தை அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான்.  மணிகண்டன் அவதார நோக்கமான மகிசமூகி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்ட்டீக பிரம்மச்சாரியாக (உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை. சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர். கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது. ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர்.லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பதால். இவர்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கும். Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து பிரச்சனைகள் தீரும். ஆண்களின் ஆன...

சனிக்கிழமை பெருமாளை வணங்கலாமா

சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் உள்ள தொடர்பு.  சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும்.  சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கூறுகிறார்கள். என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்கள்.  உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர் சனீஸ்வரா யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய் என்றார். ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண...

குல தெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

வெளியூரில் மற்றும் குல தெய்வம்  தெரியாதவர்கள் முருகனையோ, ஐயப்பரையோ வணங்கலாம். பங்குனி மாத உத்திர நட்சத்திர அன்று எல்லோரும் சாஸ்தா என்ற குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அவர்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பூஜா பொருட்கள் கொடுத்தும் வழிபடலாம். அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலுக்கும் சென்று வழிபடுவதன் மூலம்  உங்களின் குல தெய்வ சாஸ்தா கோவில் விரைவில் தெரியும்.    தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர். புங்கமுடையார் சாஸ்தா, சுந்தரபாண்டிய சாஸ்தா, குருந்துடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, மலையரசி தீரன் தம்பிரான் சாஸ்தா, அருஞ்சுனை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், மருதமலை ஐயனார், பூலுடையார் சாஸ்தா,  செங்கொடி சாஸ்தா, பொன்பெருமாள் சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, கரையடி மாடசாமி சாஸ்தா,  நடுகாடுடையார் சாஸ்தா  மற்றும் பூலுடையார் சாஸ்தா, ஆனைமலை சாஸ்தா, பூலியுடையார் சாஸ்தா, பெருவேம்புடையார் சாஸ்தா, வ...

மதுரை - பஞ்சபூதத் தலங்கள்

நீர் ஸ்தலம் -  திருவாப்புடையார் கோயில் , மதுரை செல்லூர்  ஆகாய ஸ்தலம் - பழைய சொக்கநாதர் கோயில், சிம்மக்கல் நில ஸ்தலம் - இம்மையில் நன்மை தருவார் கோயில் நெருப்பு ஸ்தலம் - தென் திருவாலவாயர் கோயில், தெற்கு மாசி வீதி காற்று ஸ்தலம் - முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .  கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்ந்த  அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்கள் திருவாரூரில் பிறந்தால் புண்ணியம், காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம், காசியில் இறந்தால் புண்ணியம், சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம், திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் . மதுரையில் பிறந்தாலும்  மதுரையில் வாழ்ந்தாலும்  மதுரையில் இறந்தாலும்  மதுரையில் வழிபட்டாலும்  மதுரையை நினைத்தாலும் புண்ணியம். மதுரையின்  எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள் சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் சீறா நாகம்...