முதலில் தோன்றிய அரக்கர்கள்

ஆதிசேஷன் மேலே விஷ்ணு படுத்திருந்து யோக நித்திரை செய்தார். அவர் பிரம்மாவின் அகங்காரம் அழிக்க நினைத்தார். தன் காதில் கைகளை விட்டு அழுத்தினார் அப்பொழுது வலது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து மது என்ற அரக்கன் தோன்றினான். இடது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து கைடவன் என்ற அரக்கன் தோன்றினான். இரு அரக்கர்களும் பயங்கர தோற்றத்தில் இருந்தனர். இருவரும் தண்ணீரில் குதித்து குதித்து அட்டகாசம் செய்தனர். இருவரும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள எண்ணினார். அப்பொழுது வானில் ஓர் அசரீரி கண்களை மூடி கொண்டு தேவியை நினைத்து தவம் செய் என்றது. அவர்கள் இருவரும் அமைதியாக பல வருடங்கள் தவம் இருந்தனர்,

தவத்திற்கு வரம் கொடுக்க எண்ணி தேவி தோன்றினாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் தேவி. அரக்கர்கள் இருவரும் எங்களை எவராலும் தோற்கடிக்க கூடாது மற்றும் நாங்கள் நினைத்தாள் மட்டுமே மரணம் வர வேண்டும் என்றார்கள். உடனே வரம் கொடுத்த தேவி மது கையில் சூலமும் கைடவன் கையில் வேலும் கொடுத்து இது உங்கள் கையில் இருக்கும் வரை உங்களுக்கு அழிவு வராது என்றாள் தேவி.

ஒரு நாள் தண்ணீரில் தாமரை மலர் இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றனர். பிரம்மா நான் சிருஷ்டி செய்யாத இரு பயங்கர உருவத்தை கண்டு பயந்து தாமரைக்குள் ஒளிந்து கொண்டார். பின்னர் விஷ்ணுவிடம் இவர்கள் இருவரை பற்றியும் கேட்டு சரணாகதி அடைந்தார்.  

கருத்துகள்