சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது

பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன். மணிகண்டன் இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், கம்பு, சிலம்பம், களரி, வில், வாள் வித்தை அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான். 

மணிகண்டன் அவதார நோக்கமான மகிசமூகி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்ட்டீக பிரம்மச்சாரியாக (உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை.

சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர். கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர்.லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பதால். இவர்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கும். Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து பிரச்சனைகள் தீரும். ஆண்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும்.

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்க்கத் துவங்கிய பின் தான் பந்தள மன்னர் ராசசேகரனுக்கே குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆண்டுகளாகவே இங்கு பெண்களை அனுமதிப்பதில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்பே 1816 ல் பென்ஜமீன் ஸ்பயன் பர்டு, பீட்டர் அயர் கார்னர் என்ற இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள் திருவிளாங்கூர் கொச்சி மாகாணங்களில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு மக்களின் கலாச்சாரம் பாரம்பரியத்தை  MEMOIR OF THE SURVEY OF THE TRIVANCORE AND COCHIN STATES என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 

அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. பூப்பெய்தல் முன் பருவமும் பேரிளம் பெண்ணிற்கு பின் பருவமும் அனுமதிக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை மாதவிடாய் மூலம் வெளி வரத்துவங்கிய நாட்களில் இருந்து அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது அவர்களது Fertile காலம்.

சரி இப்பொருது மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம். பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது. இதில் ஒவ்வொறு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை வெளியேறும்.

இப்பொழுது கருமுட்டை கருமுட்டைப்பையில் 14 நாட்கள் வளர்கிறது. வளர்ந்த கருமுட்டை felopian tube வழியாக கருப்பையை 7 நாட்களில் அடைகிறது.

இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க தனது உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கருப்பை வரவேற்கிறது. இந்த காலத்தில் ஒரு ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், அந்த சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை 7 நாட்களில் வெளியேறும்.

ஆக மொத்தம் 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான் 28 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.

பெண்களை சந்திரனுடன் ஒப்பிடுவார்கள். சந்திரனும் மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி கருப்பையை வலுவடையச்செய்யும்.

மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்கு வேண்டும் என பெண்களுக்கு சில வழிமுறை


  • இந்த காலத்தில் பெண்கள் காந்தம் போன்றவர்களாய் மாறுவார்கள். இவர்களின் பிராண சக்தி கழிவுகளை வெளி தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும். அந்த மூன்று நாள் இவர்கள் Receiving Antenna வாக மாறுவார்கள். தன்னை சுற்றி உள்ள நல்ல சக்திகளாக இருந்தாலும், கெட்ட சக்திகளாக இருந்தாலும் எளிதாக ஈர்த்துக்கொள்வார்கள். எனவே தான் மூன்று நாள் ஓய்வில் ஒரு இடத்தில் இருக்கச்சொன்னார்கள். மாலை நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது என சொன்னார்கள். இந்த காலத்தில் வரும் இரத்த வாடை கெட்ட சக்திகளை ஈர்க்கும் வல்லமை பெற்றது. எனவே தான் வெளியில் சென்றால் கரிகட்டையும் இரும்புத்துண்டும் கொடுத்து அனுப்புகிறோம். இந்த கரித்துண்டும் இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும். இரத்த வாடை மிருகங்களையும் ஈர்க்கும்.
  • இவர்களது உடல் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது கோவிலுக்கு வந்தால் அங்கு உள்ள விக்ரக சக்திகளுக்கு சிதைவு நிலை ஏற்பட்டு பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும் என்பதனாலேயே கோவிலுக்கு செல்லக்கூடாது என சொன்னார்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும்(Energy Level) காணாமல் போகும். யாரேனும் இந்த காலத்தில் இவர்களை தொட்டாலோ அருகில் வந்தாலோ அவர்களது உடலில் சக்திகள் குறைந்து ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதனாலே தான் யாரையும் தொடக்கூடாது என சொன்னார்கள்.
  • குளிக்க கூடாது. குளித்தால் வெப்பம் குறைந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. பின் அது உள் தங்கி கட்டிகளாக மாறிவிடும்.
  • அந்தகாலத்தில் சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது வெப்பத்தை பாதுகாத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவி புரியும்.
  • தனியாக பொருட்களை பயன்படுத்தியதும், சக்தி நிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான்.
  • எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது இயக்க சக்திகள் அவர்களது கருப்பைக்கு சக்தியை கொடுத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். ஓய்வில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்தால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் pcod pcos போன்ற பல்வேறு நீர்கட்டிகளாக மாறும். இதை கழிவுகள் என்று சொல்ல முடியாது. அந்த கருமுட்டையை வளர்த்த உடல் சேகரித்து வைத்த ஊட்டப்பொருட்கள் எனலாம்.
  • சபரிமலையில் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வழிபாட்டு முறையில் பெண்களை அனுமதித்தால், பெண் உடலில் ஆண் Harmone அதிகரித்து அப்பெண்ணிற்கு குழந்தை பிறக்காமல் போகும்.
  • ஆண்கள் ஒன்று சேரும் கூட்டத்திற்குள் பெண்களை அனுமதித்தால் ஆண்களின் ஆன்ம பலம் சீர்குலைக்கப்படும். ஆண் சக்தியின் வீரியம் குறையும். ஆண்கள் எதற்காக செல்கிறார்களோ அதன் பலன் கிடைக்காமல் போகும்.

கருத்துகள்