மந்திர தேசத்தில் அஸ்வபதி என்ற மன்னன் நல்ல ஆட்சி செய்துவந்தான். தனக்கு குழந்தை இல்லாத காரணத்தின் சரஸ்வதியை நினைத்து தவம் செய்தான். அவனுக்கு சரஸ்வதி குழந்தை வரம் கொடுத்தாள். பெண் குழந்தை பிறந்தது.சாவித்திரி என்று பெயரிட்டான். அவள் வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அவளுக்கு திருமணம் செய்ய நினைத்து நாரத முனிவரிடம் கூறினான். ஆனால் அவர் சத்தியவதி சாலவதேச மன்னன் சத்தியவானை விரும்புவதை கூறினார். ஆனால் அவன் ஆயுட்காலம் ஓராண்டுமட்டும் என்றார்.
அவனின் தந்தை தன் பகைவர்களிடம் நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வனவாசத்தில் மனைவியுடன் இருவரும் கண் பார்வையில்லாமல் சத்யவானுடன் வாழ்ந்து வருகின்றனர். அசுவபதி மன்னன் தன் மகளிடம் வேறு ஒருவரை திருமணம் செய்து வைப்பதாக கூறினான். சாவித்ரி சத்தியவானை தவிர வேறு யாரையும் மணம் செய்ய மாட்டேன் என்றாள். அப்போது நாரதர் உன் மகள் கற்புநெறி தவறாதவள் அதனால் தன் கணவனை காப்பாற்றிக்கொள்வாள் என்றார்.
அசுவபதி மன்னன் சாலவ மன்னனிடம் இதை தெரிவித்தான். நாட்டிலைந்ததால் சாலவ மன்னன் வருத்தப்பட்டான். அவனை சமாதானபடுத்தி திருமணம் செய்துவைத்தார்கள். சாவித்திரி கணவனுக்கு பணிவிடை செய்து மாமனார் மாமியாரை சிறப்பாக உபசரித்து வந்தாள். சத்தியவானின் ஆயூட்காலம் நெருங்கியது. கணவனின் ஆயுள்விருத்தியை வேண்டி சாவித்ரி உமா தேவியை பூஜை செய்துவந்தாள். மாமனார் மாமியாரிடம் உத்தரவு பெற்று காட்டில் சத்யவானுடன் தேவியை பூஜை செய்ய சென்றாள்.
கணவன் தண்ணீர் கேட்டதால் தண்ணீர் எடுக்க சென்றாள். முடிவு காலம் நெருங்கியவுடன் யமன் சத்தியவானின் உயிரை எடுத்தான். கற்புக்கரசியான சத்தியவதி கண்ணில் யமன் தெரிந்தான். அவள் யமனிடம் தன் கணவனின் உயிரை திருப்ப தருமாறு வேண்டினாள். யமனோ நான் தர்ம முறைப்படி உயிரை யெடுத்து விட்டேன் வேறு ஏதேனும் வரம் கேள் என்றான். அதற்கு சத்தியவதி என் கணவனை உயிரோடு தாருங்கள் அல்லது என் உயிரையும் சேர்த்து எடுங்கள் என்றாள். எமன் விதி முடியும் முன்பு யாரோட உயிரையும் எடுக்கமாட்டேன் என்றான்.
ஏதெனும் ஒரு வரம் கணவன் உயிரை தவிர கேள் கட்டாயம் தருகிறேன் என்று சத்தியம் செய்தான். இதை பயன்படுத்திய சத்தியவதி நான் கற்பில் தவறாது இழந்த நாட்டை என் குழந்தை ஆட்சி செய்வதை யானது மாமனார் மாமியார் பார்க்க வேண்டும் என்றாள். யமன் உடனே யோசிக்காமல் வரம் தந்தேன் என்றான். எமன் தன் கணவன் உயிரை எடுத்து கொண்டு சென்றான். சத்தியவதி எமனை பார்த்து என் கணவன் உயிரோடு இருந்தால் மட்டுமே என் குழந்தை நாட்டை அரசு செய்ய முடியம். பகைவர்களிடம் நாட்டை என் கணவன் சண்டையிட்டு மீட்டுத்தர முடியும் என்றாள்.
சாவித்திரியின் அறிவுக்கூர்மையை பாராட்டி சத்தியவானின் உயிரோடு எழ செய்தார். பின்னர் அவர்களை வாழ்த்திவிட்டு எமன் வெறும் கையோடு சென்றான். நாம் இறைவனை முழுமையாக நம்பினால் எந்த நெருங்காது.
கருத்துகள்