Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பூஜை பொருள்கள் பலன்கள்

தங்கம் வைராக்கியம் தரும் மாம்பழம் சகலமும் வசியமாகும் எலுமிச்சை எமபயம் நீங்கும் தேங்காய் துருவல் வேலை வாய்ப்பு கிடைக்கும் பூக்கள் மகிழ்ச்சி தரும் பச்சை கற்பூர...

கந்த சஷ்டி விரதம்

காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன்  மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே முருகன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.  சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தார். சிங்கமுகன் மற்றும் தாரகாசூரன் (யானைமுகன்) கொன்று கிரவுஞ்ச மலையையும் அழித்தார். பின்னர் சூரபத்மனுடன் போரிட்டார். அவன் முருகனின் விஸ்வரூபம் கண்டு தன்னை மன்னிக்க வேண்டி மாமரமாக நின்றான். முருகப் பெருமானும் அவனை மன்னித்து மாமரத்தை பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார். ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதாகும்.  ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்...

காளியின் வரலாறு

தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமானிடம் தனக்கு இளம்பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்றான்தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது.  அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார்.  அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள்.  ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள்....

தில ஹோமம்

தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த...

தேய்பிறை அஷ்டமி பெயர்கள்

ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி சித்திரை - ஸ்நாதனாஷ்டமி வைகாசி - சதாசிவாஷ்டமி ஆனி - பகவதாஷ்டமி ஆடி - நீலகண்டாஷ்டமி ஆவணி - ஸ்தானுஷ்டமி புரட்டாசி - ஜம்புகாஷ்டமி ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி கார்த்திகை - ருத்ராஷ்டமி (மஹா பைரவஷ்டமி) மார்கழி - சங்கராஷ்டமி தை - தேவ தேவாஷ்டமி மாசி - மகோஸ்வராஷ்டமி பங்குனி - திரியம்பகாஷ்டமி இந்த அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் எல்லா பிரச்சினைகளும் நீங்கும்.

சரஸ்வதி பூஜை

வீட்டில் கடைகளில் கொலு வைத்து இருப்பவர்கள், வைக்க முடியாதவர்கள் செய்யும் பூஜையே சரஸ்வதி பூஜை. சிவனுக்கு முக்கியம் சிவராத்திரி. அம்பாளுக்கு நவராத்திரி. மூப்பெரும...

பலிக் கல்லை தொடலாமா?

கோவிலில் தரிசனம் செய்யும் போது பலிக்கல்லை மிதிக்காமல் இருக்க வேண்டும். தெரியாமல் மிதித்தால் தொடாமல் மன்னிக்கமாறு இறைவனை வேண்டவும். பலிக்கல்லை மிதிப்பது பாவமாகும். அதை தொட்டு தலையில் வைப்பது மகா பாவம். இது கோவிலில் உள்ள இதர தேவதைகளுக்கு உணவு வைப்பதற்க்காக அமைக்க பட்டது. மற்றும் திவ்ய சக்தியின் உணர்ச்சியின் சின்னங்களே கோவிலுக்கு சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கும் பலிக்கல். ஒரு பலிகல்லிலிருந்து சக்தி அடுத்த பலிக்கல்லுக்கு கடந்து கொண்டு இருக்கும். இவ்வாறு தேவ விக்கிரத்தை சுற்றி கொண்டு இருக்கும் சக்தி துணடித்து போகக் கூடாது. இந்த சக்தி நமது உடலில் பாதிப்பு உண்டாகும். அதனால் நடைபாதையில் பலிக்கல் வைப்பது இல்லை.