வீட்டில் கடைகளில் கொலு வைத்து இருப்பவர்கள், வைக்க முடியாதவர்கள் செய்யும் பூஜையே சரஸ்வதி பூஜை. சிவனுக்கு முக்கியம் சிவராத்திரி. அம்பாளுக்கு நவராத்திரி. மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லெட்சுமி, சரஸ்வதியை வணங்குவதற்காக.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் . பண்டிகையே நவராத்திரி எனப்படும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லெட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷாசூரன் என்ற அரக்கனை வதம் செய்தது விஜய தசமியாக கொண்டாடுகிறோம்.
கலைமகள் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்து வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்கிறோம்.
உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம் . கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் சரஸ்வதி.
Comments