Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

தில ஹோமம்

தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது.

இறந்தபின் ப்ரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும். எந்த ஒரு ப்ரேதத்திற்க்கு சரியான முறையில் அந்திம கிரியை எனும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் எலும்பை சுற்றி வரும்.

விபத்துகளில் மரணம் நேரும்போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையே அடைந்துவிடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. அந்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றிவருகின்றன.

மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும் (நியமனங்களை கடைபிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், விபத்தினால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) திருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல்,வருஷா வருஷம் முறையாக சிராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் சிராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.

சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தான்யமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது 

எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியது.  அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

எள்ளின் காரகரும் சனீஸ்வர பகவானாவர். எனவே ப்ரேத சம்ஸ்காரம் செய்து அஸ்தி விஸர்ஜனம் செய்ய இயலாமல் போகும்போது தில ஹோமம் செய்வது அந்த தோஷத்தை போக்குகிறது.

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில் ப்ரேத ஸ்வரூபியாக "ஆயாது பிதர:" என கூறி ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்ய கூடாது.

ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்க பட்டினம் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்களில் செய்யவேண்டும்.

ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள்.

கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாஸை பரணி நக்ஷத்ரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமத்துக்குச் சிறந்தவை. ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும்.

தில ஹோமம் செய்ய வேண்டியத் தேவை உள்ளதா? என்பதை தக்க நபரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...