Skip to main content

Posts

Showing posts from September, 2017

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

காளியின் வரலாறு

தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமானிடம் தனக்கு இளம்பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்றான்தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது.  அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார்.  அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள்.  ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள்....

தில ஹோமம்

தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த...

தேய்பிறை அஷ்டமி பெயர்கள்

ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி சித்திரை - ஸ்நாதனாஷ்டமி வைகாசி - சதாசிவாஷ்டமி ஆனி - பகவதாஷ்டமி ஆடி - நீலகண்டாஷ்டமி ஆவணி - ஸ்தானுஷ்டமி புரட்டாசி - ஜம்புகாஷ்டமி ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி கார்த்திகை - ருத்ராஷ்டமி (மஹா பைரவஷ்டமி) மார்கழி - சங்கராஷ்டமி தை - தேவ தேவாஷ்டமி மாசி - மகோஸ்வராஷ்டமி பங்குனி - திரியம்பகாஷ்டமி இந்த அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் எல்லா பிரச்சினைகளும் நீங்கும்.

சரஸ்வதி பூஜை

வீட்டில் கடைகளில் கொலு வைத்து இருப்பவர்கள், வைக்க முடியாதவர்கள் செய்யும் பூஜையே சரஸ்வதி பூஜை. சிவனுக்கு முக்கியம் சிவராத்திரி. அம்பாளுக்கு நவராத்திரி. மூப்பெரும...

பலிக் கல்லை தொடலாமா?

கோவிலில் தரிசனம் செய்யும் போது பலிக்கல்லை மிதிக்காமல் இருக்க வேண்டும். தெரியாமல் மிதித்தால் தொடாமல் மன்னிக்கமாறு இறைவனை வேண்டவும். பலிக்கல்லை மிதிப்பது பாவமாகும். அதை தொட்டு தலையில் வைப்பது மகா பாவம். இது கோவிலில் உள்ள இதர தேவதைகளுக்கு உணவு வைப்பதற்க்காக அமைக்க பட்டது. மற்றும் திவ்ய சக்தியின் உணர்ச்சியின் சின்னங்களே கோவிலுக்கு சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கும் பலிக்கல். ஒரு பலிகல்லிலிருந்து சக்தி அடுத்த பலிக்கல்லுக்கு கடந்து கொண்டு இருக்கும். இவ்வாறு தேவ விக்கிரத்தை சுற்றி கொண்டு இருக்கும் சக்தி துணடித்து போகக் கூடாது. இந்த சக்தி நமது உடலில் பாதிப்பு உண்டாகும். அதனால் நடைபாதையில் பலிக்கல் வைப்பது இல்லை.

விஜயதசமி

வரமுனி என்ற முனிவர் தன் தவவலிமையால் தன்னை விட சிறந்த முனிவர்கள் இல்லை என்ற தலைகனத்துடன் எல்லா முனிவர்களையும் ஏளனமாக மதித்தார். ஒருமுறை முனிவர்கள் செய்யும் யாகத்...

பதினெட்டு சித்தர்கள்

1.திருமூலர் 2.இராமதேவர் 3.கும்பமுனி 4.இடைக்காடர் 5.தன்வந்திரி 6.வான்மீகி 7.கமலமுனி 8.போகநாதர் 9.குதம்பைச் சித்தர் 10.மச்சமுனி 11.கொங்கணர் 12.பதஞ்சலி 13.நந்திதேவர் 14.போதகுரு 15.பாம்பாட...

ஹோமம் - சமித்துகள்

பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோக...

முன்னோர்களுக்காக சிரார்த்தம் செய்யும் நாட்கள்

ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் மாதபிறப்பு நாட்கள்-12 மாத அமாவாசை-12 மகாளபட்ச நாட்கள்-16 யுகாதி நாட்கள்-4 மன்வாதி நாட்கள்-14 வியதீபாதம்-12 வைத்ருதி-12 அஷ்டகா-4 அன்வஷ்டகா-4 பூர்வேத்யு-4  ரதசப்தமி  - 1 பீஷ்மாஷ்டமி  - 1 இந்த 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது. தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி அன்று தர்பணம் செய்யாதவன் சண்டாளனாக அடுத்த பிறவியில் பிறப்பான். அவர்கள் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொடுக்க வேண்டும்.

51 சக்தி பீடங்கள்

பிரம்மாவின் புதல்வர்களுள் ஒருவன் தட்சன். அவனை தட்சப் பிரஜாபதி என அனைவரும் அழைப்பர். அவன் மகள் சதி தேவி எனப்படும் தாட்சாயணி. அவள்  சிவபெருமானை மணந்து கொண்டாள். தட்ச...

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும்.  இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி. தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான அகோர முகத்திலிருந்து தோன்றியவர்.  இவர் குரு பிரகஸ்பதியின் அதிதேவதை ஆவார். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள் என்பவைகளாகும். ஈசான  முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின. தத்புருஷ  முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின. அகோர  முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின. வாமதேவ  முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின. சத்யோதஜாத  முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநா...