பிரம்மாவின் புதல்வர்களுள் ஒருவன் தட்சன். அவனை தட்சப் பிரஜாபதி என அனைவரும் அழைப்பர். அவன் மகள் சதி தேவி எனப்படும் தாட்சாயணி. அவள் சிவபெருமானை மணந்து கொண்டாள். தட்சன் மிகப்பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் யாகத்தில் கலந்து கொள்ள அழைத்தான். ஈசனை விட தான் உயர்ந்த நிலையை அடைந்து விட்டதாக கருதினான். சதிதேவியையும், சிவபெருமானையும் தவிர தேவர்கள், முனிவர்கள் அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். தன் தந்தை யாகத்திற்கு அழைக்காவிட்டாலும் தன் கணவரான ஈசனுக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற தீர்மானித்தாள் சதி தேவி. யாகத்திற்குச் செல்ல ஈசனிடம் அனுமதி கேட்டாள் சதிதேவி. அழையா விருந்தாளியாகச் சென்றால் அவமானம் ஏற்படும் எனும் ஆதங்கத்தில் ஈசன் அதற்கு அனுமதி மறுத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது. வேறு வழியின்றி யாகத்திற்குச் செல்ல அனுமதி தந்தார்.
யாகசாலையில் நுழைந்த சதியை அவமானப்படுத்தினான்.அதனால் மனம் நொந்த சதிதேவி அந்த யாக குண்டத்தில் விழுந்தாள். அதை அறிந்த ஈசன் வீரபத்திரரை தோற்றுவித்து தட்சயாகத்தை அழித்தார். சதியின் உடலை தன் தோளில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அதனால் உலகமே நடுங்கியது. திருமால் தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக்கினார். அவை பாரத தேசமெங்கும் சிதறி விழுந்து சக்தி பீடங்களாயின.
பராசக்தியின் 51 சக்திபீடங்கள் இந்தியாவில் தமிழ்நாடு
Comments