Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .
இன்றைய ராசி பலன் மேஷம் : நன்மை ரிஷபம் : பயம் மிதுனம் : ஆதரவு கடகம் : வெற்றி சிம்மம் : அலைச்சல் கன்னி : பயம் துலாம் : நன்மை விருச்சிகம் : கோபம் தனுசு : நன்மை மகரம் : வெற்றி கும்பம் : ஆதாயம் மீனம் : நன்மை

மழை பொழிய மந்திரம்

இந்திர காயத்ரி ஓம் தேவராஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தந்நோஹ் இந்திர ப்ரசோதயாத் வருண காயத்ரி ஓம் ஜலபிம்பாய வித்மஹே நீல் புருஷாய தீமஹி தன்னோ வருணப் ப்ரசோதயாத் நல்ல மழை பொழியணும்  ஓம் வம் வருண தேவாய நமஹ ஓம் யம் வாயு தேவாய நமஹ ஓம் ஹம் ஆகாஷ் தேவாய நமஹ ஓம் ரீங் வாயு தேவாய ஆகர்ஷயஆகர்ஷய க்குரு க்குரு ஸ்வாஹா ஓம் ரீங் வருண தேவாய ஆகர்ஷயஆகர்ஷய க்குரு க்குரு ஸ்வாஹா ஓம் ரீங் இந்திர தேவாய ஆகர்ஷயஆகர்ஷய க்குரு க்குரு ஸ்வாஹா ஓம் ரீங் மேகான் ஆகர்ஷய  ஆகர்ஷய க்குரு க்குரு ஸ்வாஹா.

விரத நாட்களில் வெங்காயம் வெள்ளைப் பூண்டு சாப்பிடக் கூடாதா

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.  காடாம்புழா பகவதி கோயில்  காலை : 5am  11am  மாலை : 3:30Pm  7pm  குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்  காலை : 3 மணி  1 மணி  மாலை 3 மணி  இரவு 9 மணி  திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்  காலை : 4.30AM  12pm  மாலை : 4.30Pm  8:30pm  கொடுங்களூர் பகவதி கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை : 4.30Pm  8pm  சோட்டானிக்கரை பகவதி கோயில்  காலை : 3:30AM  12pm  மாலை 4 மணி  இரவு 8 மணி  கீழ்க்காவு குருதி  இரவு: 8.30 மணி  வைக்கம் மகாதேவர் கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  கட்டுருத்தி மகாதேவர் கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  மல்லியூர் கணபதிகோயில்  காலை : 4.30AM  12:30pm  மாலை : 4.30Pm  8pm  ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  கிடங்கூர் சுப்...

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது  அந்த 18 கருவிகள் வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும் பதினெட்டுப் படிகளை இந்திரியங்கள் ஐந்து ( 5 ) புலன்கள் ஐந்து ( 5 ) கோசங்கள் ஐந்து ( 5 ) குணங்கள் மூன்று ( 3 ) என்று கூறுகிறார்கள் அவை முறையே இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) : கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள் புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் )  பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் )  அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் )  ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, ச...

புலி குன்னூர் புலி கொன்று குருநாதன் முகடி

புலி குன்னூர் (புலி குன்று) பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும் பின்னர் அந்த புலிகளை திரும்பக் கொண்டு சென்று விட்ட போது ஒரு புலி இந்திரன் ஆகவும் ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம் தான் இந்த புலி குன்னூர். மணிகண்டன் புலியுடன் வந்து கீழே இறங்கிய போது அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பது இந்த ஸ்தத்தின் சிறப்பு ஆகும். குருநாதன் முகடி குன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குருநாதன் ஐயப்பன் குருகுலத்தில் படித்து பல வித்தைகளை கற்றுக் கொண்ட இடம். முக்கியமாக குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது உண்மை. மணிகண்டனுக்கு கல்வி கற்று தருவதற்காகவே அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

சிவபெருமானின் 19 அவதாரங்கள்

சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும்.  பிப்லாட் அவதாரம்: ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.   நந்தி அவதாரம்: நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார்.  வீரபத்ர அவதாரம்: தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்த...
1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8.ஐந்திணை ஐம்பது  9.திணைமொழி ஐம்பது  10.ஐந்திணை எழுபது  11.திணைமாலை நூற்றைம்பது  12.திரிகடுகம்...

தாலி

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....! இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....! இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த "தாலி...

காரிய சித்தி மந்திரம்

ஒரு நெய் விளக்கு ஏற்றிவிட்டு அதன் பிறகு ஒரு விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்கரித்துவிட்டு ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும். பிறகு கீழே உள்ள மந்திரம் அதை கூற வேண்டும் ஓம் சிவாய நம ஓம் ஓம் சர்வ சக்தி ஓம் ஓம் ஓங்கார சக்தி ஓம் ஓம் பிரணவப் பொருளே ஓம் ஓம் பஞ்சாட்சரமே ஓம் ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம் ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம் ஓம் சவர் ஜெயசக்தியே ஓம் ஓம் மசி நசி அங் மங் சங் ஆதார சக்தியே ஓம் இந்த மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் தினம் 108 முறை கூற வேண்டும். அதன் பிறகு தினமும் ஒரு முறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு அந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி நிச்சயம்

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்

ராமர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் கீழே இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு.  ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள்

திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன உலகத்திலேயே இந்த பாறைகள் இந்த இடத்தில மட்டுமே கிடைக்கும். இந்த பாறைகளின் வயது 250கோடி வருடங்கள் ஆகும். ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாதிக்கின்றனர். இந்த பச்சை கற்பூரம் ஒரு ரசாயனம் இது அரிப்பை கொடுக்கும் ரசாயனமாகும்.இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் அந்த கல்லானது வெடித்துவிடும்.ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் தடவுகின்றன ஆனாலும் இந்த சிலையில் எந்த ஒரு வெடிப்பும் இதுவரை வந்ததில்லை. -  - எந்த கருங்கல் சிலை ஆனாலும் எங்காவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் அடையாளம் தெரியும் அல்லது உலோகசிலையானாலும் அதை வடிவமைத்த அடையாளம் தெரியும்.ஆனால் இந்த சிலையில் எந்த ஒரு அடையாளமும் இதுவரை தெரிந்ததில்லை.எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும் ஆனால் இச்சிலையில் வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போட்டதுபோல இருக்கின்றன. காலையில் சிறப்பு அபிஷேகம் கோவிலில் வழக்கமாக நடைப்பெறும்.அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்சம் ருபாய் செலவிடப்படுகிறது. ஐரோப்ப...

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை. புஷ் கலையை மணமுடித்த  சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி பகவதி அம்மனாக பத்ரகாளி வடிவத்தில் காட்சி தருகிறார்.

மூல நட்சத்திரக்காரர்களின் திருமண தடை நீக்கும் கோவில்

ஆம்ரவனேஸ்வரர் கோவில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் ஸ்தலம். இங்கு அர்ச்சனை செய்தால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆம்ரவனேஸ்வரர் கோவில். இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது, இறைவன் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி குறைவில்லாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்.  இவ்வாலயம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவர்கள் இத்தலத்தில் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்து வந்தால், அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இக்கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், கல்வியில் மேன்மை பெறவும், வாழ்க்கையில் உள்ள தீராத இன்னல்கள் தீங்கவும், செய்யும் தொழில் மேன்மை அடையவும், மூல நட்சத்திரத்தி...

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

சுருட்டப்பள்ளி, சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.ஆனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார்.  விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.  அப்பொழுது, எல்லோரும் கர்ப்பக்கிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாகத் தரிசிக்கலாம். சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்துத் தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மற்ற எந்தச் சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இருக்கும் இவரை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்வுலகைக் காப்பதற்காக அமிர்தத்தைக் கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனைச் ...

தாமோதர லீலை

தமிழில் பன்னிரண்டு மாதங்கள் இருப்பதுபோல, சமஸ்கிருதத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் மாதம் மிகவும் விசேஷமானதாகும்.  20.10.2021 முதல் 19.11.2021 வரை தாமோதர மாதமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தா மோதர மாதத்தை கார்த்திக் மாதம் என்றும் அழைப்பதுண்டு. தாமோதர மாதத்தின் மகிமை தாமோதர மாதத்தின் மகிமை பல்வேறு புராணங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மாதங்களில் மிகவும் தூய்மையானதாக, புனிதமானதாக, மங்களகரமானதாக, புகழ் வாய்ந்ததாக, மற்றும் விஷேசமானதாக போற்றப்படுகின்றது தாமோதர மாதம். ஒருவர் இந்த மாதத்தில் சிறிதளவு பக்தி செய்தாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய பாவங்கள் அனைத்தையும் அழித்து, பக்தித் தொண்டில் பெரும் முன்னேற்றமடைய உதவுகிறார். தாமோதர மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது. கிருஷ்ண பக்தர்கள் இம்மாதம் முழுவதும் தினந்தோறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். தாமோதர லீலை இம்மாதத்திற்கு தாமோதர மாதம் என்று பெயர் வருவதற்கு, இம்மாதத்தின் திருநாள்...

அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு

அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம். இராமலிங்க அடிகள் ஊனுடம்பில் 1823 ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, அவ்வாண்டு சனவரி 30ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தன் உடலை ஒளியில் கரைத்துக்கொண்டு ஒளிவடிவம் பெற்று இறைவனோடு ஒன்றானார். அடிகளார் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கு வடமேற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர் என்ற விவசாய கிராமத்தில் 1823ம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் சுபானு‌ புரட்டாசி 21 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் மாலை 5.54 மணிக்கு தவத்திரு இராமையா பிள்ளை திருமதி.சின்னம்மையார் என்ற தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு சபாபதி பரசுராமர் என்ற இரு மூத்த சகோதரர்களும், சுந்தராம்பாள் உண்ணாமுலை என்ற மூத்த சகோதரிகளும் இருந்தனர். அடிகளார் ஐந்து இடங்களில் வாழ்ந்துள்ளார். 1823 ஆம் ஆண்டுமுதல் 1825ஆம் ஆண்டுவரை கைக்குழந்தையாக மருதூரிலும், 1825 முதல் 1858 வரை சென்னையிலும், 1858 முதல் 1867 வரை கடலூர் மாவட்டத்திலுள்ள கருங்குழி என்ற கிராமத்திலும், 1867 முதல் 1870 வரை வடலூரிலும், 1870 முதல் 1874 வரை மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத்திலும் வாழ்ந்துள்ளார்....

சடாரி

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும் . இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு பெருமாளின் திருவடிகளாக பாவித்து பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது .

விஜயதசமி ஏன் கொண்டாடுகிறோம்?

ஒருசமயம் அரக்கர்குல தலைவனான ரம்பா ஒரு எருமையை மணம் முடித்தான். அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன். மகிஷாசூரன் தேவர்களின் எதிரிகளான அசுர குலத்தினன். எருமையை வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு சுக்கிராச்சாரி.  மகிஷாசூரன் கடுந்தவம் நோற்று பிரம்மனிடம் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான் ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுத்தான்.  தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி ஒன்பது நாட்கள் அசையாமல் இருந்து பத்தாவது நாள் விஜயதசமி தினத்தன்று துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வதம் செய்தாள். ஒன்பது நாட்கள் எல்லா தெய்வங்களும் அசையாமல் தனது சக்திகள் அனைத்தையும் பார்வதியின் சக்தியுடன் சேர்த்தனர். அதன் காரணமாக நமது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுகிறோம்  மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி  என்று அழைக்கப்பட்டாள். .

மங்களம் தரும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகம்

சௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். வெள்ளிக்கிழமைகளிலும் இந்த லக்ஷ்மி அஷ்டகத்தை சொல்லலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம் ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம் ஓம்  ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம: ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம் சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம் ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம் மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம் மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த    சாரலக்ஷ்மீம் கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம் புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம் ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம் சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம் அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம் தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப லக்ஷ்மீம் லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக...