விரத நாட்களில் வெங்காயம் பூண்டு ஆகியவை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு கரைகிறது ரத்த அழுத்தம் குறைகிறது. பூண்டு அதிக அளவு உணவில் சேர்ப்பதால் கெட்ட கிருமிகள் அழிவதோடு நல்ல கிருமிகளும் அழிகின்றன காரணம் அதிக ஆண்டிபயாடிக் கொண்டதாகும். பூண்டு மற்றும் வெங்காயம் நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்க செய்கின்றன.
இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், பாலியல் ஆசை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் அதிகமாகும். விரத நாட்களில் நாம் உணவின் அளவை குறைத்து உண்கிறோம் அப்பொழுது நமக்கு தேவைப்படும் கலோரி மிகவும் குறைவாக உள்ளது இந்த பூண்டு வெங்காயம் உண்பதால் உடலில் கலோரி அதிகமாக கரைக்கப்படுகிறது எனவே பூண்டு வெங்காயம் விரத நாட்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார் இதை ஆன்மீக ரீதியாக கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அவ்வாறு கூறிவந்தார்கள்
கருத்துகள்