ஒருசமயம் அரக்கர்குல தலைவனான ரம்பா ஒரு எருமையை மணம் முடித்தான். அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன். மகிஷாசூரன் தேவர்களின் எதிரிகளான அசுர குலத்தினன். எருமையை வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு சுக்கிராச்சாரி. மகிஷாசூரன் கடுந்தவம் நோற்று பிரம்மனிடம் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான் ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுத்தான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி ஒன்பது நாட்கள் அசையாமல் இருந்து பத்தாவது நாள் விஜயதசமி தினத்தன்று துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வதம் செய்தாள். ஒன்பது நாட்கள் எல்லா தெய்வங்களும் அசையாமல் தனது சக்திகள் அனைத்தையும் பார்வதியின் சக்தியுடன் சேர்த்தனர். அதன் காரணமாக நமது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுகிறோம் மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள்.
.
கருத்துகள்