Skip to main content

Posts

Showing posts from February, 2020

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவில்கள்

பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் பல கோவில்கள் நமது நாடு முழுவதும் உள்ளது. கேரளாவில் கண்ணனூர் அருகில் தளிம்பரம்பா என்று இடத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, ஆண்களுக்கு அனுமதி கிடையாது. ஒரிசாவில் கேந்திரபாதா என்னும் இடத்தில் சதபையா என்னும் கிராமத்தில் மஞ்சுபாரதி கோவிலில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி அன்று பொங்கல் விடும் நேரத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. ஔவையார் நோன்பில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அந்த பிரசாதம் ஆண்களுக்கு கிடையாது.

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது

பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன், இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், வில், வாள் வித்தை, கம்பு, சிலம்பம், களரி போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான். இவன் வாள், வில் வித்தை மற்றும் களரியில் வல்லவன். தனது அவதார நோக்கமான  அரக்கியை வதம் செய்த பிறகு, தான் பிரம்மச்சாரியாக தவம் செய்ய சென்ற இடம் சபரிமலை. இது  மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர்.  மற்ற கோவில்கள் போல் இது வருடம் முழுக்க இயங்காது. கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது. ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர். அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. பூப்பெய்தல் முன் பர...

48 நாள் கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்

தினம் காலை 4:30 மணிக்கு  எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் ஐயனை வணங்கி  உணவு உட்கொள்ள  வேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்ல வேண்டும்.  பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்த கூடாது. தரையில் தூய்மையான துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும். அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ அலங்காரம் செய்யவோ கூடாது. ஒரு மிக முக்கிய கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது.  மாலை அணியாதவர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும். பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். காலணிகளை அணியக்கூடாது. மணி...

12 சிவன் கோவில்

சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே புருஷாமிருகம்  புருஷா மிருகம் விஷ்ணு நாமத்தை கேட்க விரும்பாத ஒரு வினோத விலங்கு தர்மர் நடத்திய ராஜஸீய யாகத்திற்கு புருஷமிருகத்தின் பால் தேவைப்பட்டது.அதை எடுத்து வர பீமனுக்கு தர்மர் உத்தரவிட்டார். பீமரிடம் 12 ருத்ராட்ச கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும் படி ஸ்ரீகிருஷ்ணன் கூறினார். ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான்.புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பீமன் கோவிந்தா, கோபால என்று உரக்க கூறினார். தவம் கலைந்த புருஷா மிருகம் பீமனை துரத்தியது.அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான்.அது சிவ லிங்கமாக மாறியது. உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது. மீண்டும் பீமன் கோவிந்தா, கோபாலா என உரக்கக் கூறினார். மீண்டும் தவம் கலைந்த புருஷாமிருகம் பீமரை துரத்தியது. மீண்டும் ருத்ராட்ச கொட்டையை எறிந்தான்.அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் பூஜித்தது.இப்படி 11 ருத்ராட்ச கொட்டைகளை எறிந்து அவை சிவலிங்கமாக மாறிய பின் அதை புருஷாமிருகம் பூஜிப்பதும் பின்னர...

புருஷா மிருகம்

தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார்.யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக, அவர் பீமனை அழைத்து,புருஷா மிருகத்தை அழைத்து வர உத்தரவிட்டார்.புருஷாமிருகம் என்பது, அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. புதுமனை புகுவிழாவின்போது பசுவையும், கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப்போல,யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள்.அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார். இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷா மிருகம்.வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு,அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன். புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன்.எங்கேயாவது சிவ லிங்கத்தைப் பார்த்துவிட்டால்,சிவ பூஜையை முடித்துவிட்டுத்தான் அது பயணத்தைத் தொடரும். பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான்.அது வருவதற்கு ஒப்புக்கொண்டது.என்றாலும், ஒரு நிபந்தனை விதித்தது.பீமா நான் உன் பின்னால் வருகிறேன்.உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இடைவெளி குறைந்தால், உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன்.இதற்கு நீ ஒப்புக் ...

அடைக்கலம் தரும் அக்கா தங்கை கோயில் மேலங்கோடு

 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம்  நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில்   அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் தனது மகள்களை படை தளபதி பத்மநாபன் விரும்பியதை கேட்டு, அரண்மனைக்கு கோட்டைச்சுவர் கிழக்கு மேற்கு பக்கம் உள்ள   கிணற்றில் மகள்களை தள்ளி கொன்று விடுகிறார்.  தனது தந்தையால் மரணம் எய்திய அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி  கோட்டையை  சுற்றி ஆதாளி போட்டு, வருவோரை, போவோரை அடித்து பலி வாங்கினர். பத்மநாபனை, நீலா கொன்று குடலை உருவி மாலையாக போட்டு  ஆரவாரம் செய்தாள்.  பத்மநாபனை சார்ந்தவர்களும் கோட்டையை சுற்றியிருந்த குடிமக்களும் நோய்வாய்ப்பட்டனர். சிலர் அகால மரணம் அடைந்தனர். இதையறிந்த மகாராஜா மலையாள நம்பூதரிகளை வரவழைத்து சோளி போட்டு பிரசன்னம் பார்க்கையில் இவற்றுக்கெல்லாம் காரணம்  அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என தெரிந்தது அவர்களை சாந்தப்படுத்த. நல்ல மந்திரவாதியை வைத்து பலி கொடுத்து படையல் பூஜை செய்தார்கள் . மலையாள மாந்திரீகர்கள் மூன்று பேரை வரவழைத்த மகாராஜா, கோட்டைக்கு கி...

பாபநாசம் - சூரியன்

சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.  ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்றார். பாவநாசம் தாமிரபரணி படித்துறையில் அவர்கள் நீராடியதும், கறுப்புப் போர்வை வெண்போர்வையாக மாறியது. அவர்கள் பாவம் நீங்கியது. ஆதலால் இந்த தலத்துக்கு பாவநாசம் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார்.  விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமி...