சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே புருஷாமிருகம்
புருஷா மிருகம் விஷ்ணு நாமத்தை கேட்க விரும்பாத ஒரு வினோத விலங்கு தர்மர் நடத்திய ராஜஸீய யாகத்திற்கு புருஷமிருகத்தின் பால் தேவைப்பட்டது.அதை எடுத்து வர பீமனுக்கு தர்மர் உத்தரவிட்டார்.
பீமரிடம் 12 ருத்ராட்ச கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும் படி ஸ்ரீகிருஷ்ணன் கூறினார். ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான்.புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பீமன் கோவிந்தா, கோபால என்று உரக்க கூறினார்.
தவம் கலைந்த புருஷா மிருகம் பீமனை துரத்தியது.அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான்.அது சிவ லிங்கமாக மாறியது.
உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது.
மீண்டும் பீமன் கோவிந்தா, கோபாலா என உரக்கக் கூறினார்.
மீண்டும் தவம் கலைந்த புருஷாமிருகம் பீமரை துரத்தியது.
மீண்டும் ருத்ராட்ச கொட்டையை எறிந்தான்.அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் பூஜித்தது.இப்படி 11 ருத்ராட்ச கொட்டைகளை எறிந்து அவை சிவலிங்கமாக மாறிய பின் அதை புருஷாமிருகம் பூஜிப்பதும் பின்னர் துரத்துவதுமாக இருந்தது.
12–வது இடத்தில் திருநட்டாலத்தில் ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷா மிருகம் பிடித்து பீமரை தாக்க முற்பட்டது.அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணன் பீமருக்கும், புருஷாமிருகத்திற்கும்
ஹரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
வைணவ வழி தோன்றலான பீமரும், சைவ வழி தோன்றலான புருஷா மிருகமும் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர்.
தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
இதை உணர்த்தும் வகையில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா! கோபாலா!!கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலை யணிந்து சிவபக்தர்கள்,
கையில் விபூதியுடன் கூடிய மஞ்சள் பை மற்றும் பனை ஓலை விசிறியுடன் 12 சிவாலயங்களுக்கும் ஓடி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கல் குளம் தாலுகா, விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட 12 சிவாலயங்களையும் 112 கிலோ மீட்டர் தூரம் ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.
- முஞ்சிறை அருகே திருமலை மகாதேவர் கோவில்,
- திக்குறிச்சி மகாதேவர் கோவில்
- திற்பரப்பு மகாதேவர் கோவில்,
- திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்,
- பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில்,
- திருபன்னி பாகம் சிவன் கோவில்
- கல் குளம் நீலகண்ட சுவாமி கோவில்,
- மேலாங்கோடு சிவன் கோவில்,
- திருவிடைக்கோடு மகாதேவர் கோவில்,
- திருவி தாங்கோடு சிவன்கோவில்,
- திருபன்றிகோடு மகாதேவர் கோவில்,
- திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்
Comments