சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.
ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்றார். பாவநாசம் தாமிரபரணி படித்துறையில் அவர்கள் நீராடியதும், கறுப்புப் போர்வை வெண்போர்வையாக மாறியது. அவர்கள் பாவம் நீங்கியது. ஆதலால் இந்த தலத்துக்கு பாவநாசம் என்று பெயர் வந்தது.
இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார். விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமியை வலம் வந்ததாலும் மூர்த்திக்கு 'முக்களா மூர்த்தி' என்றும், 'பழமறைநாதர்' என்றும் பெயர்.
மார்கழி மாதத்தில் இத்தலத்தில் கங்கை வந்து நீராடுவதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த லிங்கத்தை யார் தரிசித்தாலும் அவர்களுடைய அனைத்துப் பாவங்களையும் போக்குவதோடு அவர்கள் நினைத்ததையெல்லாம் கொடுத்தருள்வதால் இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பொதிகைமலையிலிருந்து வரும் அகஸ்தியர் அருவி இத்தலத்தின் வழியாக செல்லும் போது தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் முக்கூடல் - சேரன்மகாதேவி வழியாக பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பாவநாசம் எனவும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : பாவநாசர், முக்களா மூர்த்தி, பழமறைநாதர்
அம்பிகை : உலகம்பிகை
தலவிருட்சம் : முக்களா மரம்.
நவகைலாயம்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
Comments