அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும். திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும், அகல் விளக்கினை ஏற்றிவைத்துச் சொல்லி வர, செல்வம் செழிக்கும், 1.பொன்மகள் கடைக்கண் பார்வை புன்னகை புலர்ந்து கண்டால் நன்மைகள் யாவும் தேடி நயம்படக் கதவைத் தட்டும் ! மன்பதை போற்றும் செல்வம் மழையெனப் பொழியும்; வாழ்த்தும்! அன்னையே அலர்மேல் தேவி! அடியேனைக் காண்பா ரம்மா! 2. தேவியே கமல வல்லி; செந்திரு மாலின் கண்ணே! நாவினால் நின்னை யன்றி நயத்தகு நயத்தைக் காணேன்! காவியம் காணாச் செய்யுள் கற்பகத் திருவே! நின்றன் ஓவியம் நெஞ்சில் வைத்தே ஓதுவேன்; கடைக்கண் பாராய்! 3. நாரணன் தவத்தின் தேவி! ஞாலத்துப் பெண்கள் போற்றும் பூரணி! பூவில் வாழும் புன்னகை அரசி! எல்லாக் காரண கா...