ஆடிப்பெருக்கு திருநாள்

தெய்வ வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம்  இந்த ஆடி மாதம்.  உழவு பணிகளை துவங்கும் மாதம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள்.

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள். காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும்.

இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார். அந்த சமயம், கர்ப்பவதியாக இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது.

கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய் பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள். வருடம் வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந் நாராயணன்! ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்டார் ஸ்ரீராமர்.

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி தோஷம்  பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு. “இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக காவேரியில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர். தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள் ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவகிறார்.

அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள். அதை பெருமாள் முன் வைத்து, “உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள்.” என்று காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள். இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். பூஜை செய்யும் முறை இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சள், காதோலை கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பழம், பூ, அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள்.

பிறகு பூஜித்த மஞ்சள் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்.

ஒருவருடைய தாய் இறக்கும் தருவாயில் தன்னுடைய சாம்பலை காசியில் கூறி விட்டு இறந்தாள். அவனது மகன் தாயின் அஸ்தியை தன்னுடைய பணியாளுடன் காசிக்கு கொண்டு செல்லும் வழியில் இருட்டி விட்டது அதனால் மாடு வளர்க்கும் ஒருவர் வீட்டில் தங்கினார்கள். அங்கு பசுவும், கன்றுக்குட்டியும் பகலில் நடந்த நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு வியப்புற்றனர். அதன் விபரம் பகலில் பசுவிடம் பால் குடிக்க வந்த கன்றுக்குட்டி மாடு வளர்ப்பவரின் காலை மிதித்தது. வலி தாங்க முடியாத அவன் கன்றுக்குட்டியை அடித்து பால் குடிக்க விடாமல் கட்டிப் போட்டான். அன்று முழுவதும் பட்டினியாக இருந்தது. அதனால் பசு இரவில் அவனின் மகன் வரும்போது நான் முட்டி கொன்று விடுவேன். அப்போது தான் அவனுக்கு உன்னை அடித்த வேதனை தெரியும் என்று சொன்னது. உடனே கன்றுக்குட்டி அவ்வாறு செய்வது பாவம். பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் வேண்டாம் என்று சொன்னது. அதற்கு பசு பாவம் தீர வழி தெரியும் என்றது. இதை கேட்ட அவள் பசு செய்வதை பார்த்து விட்டு செல்வோம் என்றான்.

அதே போல பசு சிறுவனைக் கொன்றது. சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது அப்பா பசுவை கம்பால் அடித்து விரட்டினான்.இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் விலக காவேரியில் நீராட ஓடியது. அதே போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டது. இதை பார்த்த அவனும் தன் தாயின் அஸ்தியை காவிரியில் கரைத்தான். அவனது தாய் திவ்ய தேஜஸூடன் அவனை ஆசிர்வதித்து சொர்க்கத்திற்கு சென்றாள்.

கருத்துகள்