அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும்.
இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் கிடைக்கும் பலன்

நல்லெண்ணெய் அபிஷேகம்:  மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.
பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.
பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும்  கிடைக்கும். தோஷங்கள் நீங்கும். மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம்  உண்டாகும்.
தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.
கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
அரிசி மாவுப்பொடி  அபிஷேகம்: லஷ்மி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.
சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனதிற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும். சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும். இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்:  கெளரவம் காக்கப்படும்.
எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை போக்கும். துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும். மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை  அமையும்.

கருத்துகள்