Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியங்கள்

நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப்பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.   

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாமபூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது. 

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.

கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பை வைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம். 

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...