பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு மேற்கு சுவற்றில் தெய்வ படங்களை மாட்டலாம். லக்ஷ்மி, வெங்கடசலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளிப்புறம் மாட்ட வேண்டாம். வீட்டின் நுழைவாயிலின் உள்புறம் உள்நோக்கி மாட்டினால் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம். காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும். ...
ஜோதிட ரத்னா தா.இசக்கி ராஜ், B.Lit., த/பெ. N.S தாணு, செல் (whatsapp) : 9345934899