Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பூஜை அறை அமைப்பது

                               பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு மேற்கு சுவற்றில் தெய்வ படங்களை மாட்டலாம். லக்ஷ்மி, வெங்கடசலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளிப்புறம் மாட்ட வேண்டாம். வீட்டின் நுழைவாயிலின் உள்புறம் உள்நோக்கி மாட்டினால் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம்.

                            காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும்.

                             பூஜை அறையை வாரத்திற்கு இரு முறையாவது சுத்தம் செய்யவும். முடிந்தால் தினமும் செய்யலாம். வீட்டின் விளக்கு ஏற்றுவதற்கு ஐந்து வகை எண்ணை இல்லாவிட்டாலும் தேங்காய் எண்ணையில் ஏற்றுவது நல்லது. பூஜை அறையில் சுவாமி படங்களை அடிகடி மாற்ற வேண்டாம்.

                          நறுமண மலர்களை பயன்படுத்தவும். விளக்கின் தீபத்தை வாயால் ஊதி அணைக்க வேண்டாம்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...