நீங்கள் பார்ப்பது ஸ்ரீ ராமபிரான் ஜாதகம் இவருக்கு அதிகமான யோகங்கள் உள்ளன. ஐந்து கிரகங்களான அசுர குரு சுக்கிரன், தேவ குரு வியாழன், சனி பகவான், சூரியன், செவ்வாய் உச்சத்தில் உள்ளார்கள்.
குருவும், செவ்வாயும் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் குரு மங்கள யோகமாகும். இதனால் எதற்கும் மனம் கலங்காதவராக இருப்பர்.
கேது அயன சயன இடத்தில் இருப்பதால் அடிக்கடி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.சந்திரன், செவ்வாய் ஏழாம் இட பார்வையால் சந்திரமங்கள யோகமாகும். இதனால் பகை வெல்லல், அஞ்சா நெஞ்சம், மனஉறுதி, பிடிவாத குணம் வந்தது.புனர்பூசம் கடக லக்னத்தில் பிறந்ததால் இவர் தன்னுடைய மனைவியாக இருந்தாலும் மனம் புண்படும்படி பேசுகிறார்.
சூரியன், சனி ஏழாம் பார்வை பார்ப்பதால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது. புதனும் சூரியனும் ஒரே வீட்டில் இருப்பதால் புத ஆதிபத்திய யோகமாகும். இதனால் தந்திர வித்தைகளில் சிறந்து விளங்கினார். குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் இருப்பதால் குரு சந்திர யோகமாகும். இதனால் கொரவமான உயர்ந்த வாழ்க்கை கிடைத்தது.
சூரியனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சத்தில் இருபது வாசி யோகமாகும். இதனால் சமுதாயத்தில் மரியாதை கௌரவம் கிடைத்தது. திரிகோணத்தில் சுக்கிரன் இருப்பது மாளவ்ய யோகமாகும். இதனால் ஆடம்பர, வசதி நிறைந்த வாழ்வு, பொழுதுபோக்கால் உற்சாகம் ஏற்படும்.கேந்திரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருபது ரூசக யோகமாகும். இதனால் பூமி யோகம், கல்வி மேன்மை, வீரம், அதிகாரபதவி, செயல்திறன் ஏற்படும்.
சனி பகவான் கேந்திரத்தில் இருப்பதால் சச யோகமாகும். இதனால் தலைமை பதவி, விசுவாசமிக்க தொழிலாளிகள், எதிர்பாரத தனசேர்க்கை உண்டாகும். ஐந்து கிரக உச்சத்தினால் நாடாளும் வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கை ராஜ யோகத்தினால் ஏற்பட்டது. லக்ஷ்மிதானம் எனப்படும் ஒன்பதாம் பாவகதிபதி உச்சம் பெற்றதால் தரும காரிய சிந்தனை, திருப்பணியில் ஈடுபாடு ஏற்பட்டது.
இவ்வளவு யோகம் இருந்தும் ஸ்ரீ ராமபிரான் கடவுளாக இருந்தாலும் நவக்கிரக ஆதிக்கம் இவரை வழி நடத்தியது, அதனால் நாம் நவக்கிரகபதிப்புகளில் இருந்து மீள தினமும் தான தரும காரியங்களை செய்யலாம்.
கருத்துகள்