சுருட்டப்பள்ளி, சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.ஆனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார். விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அப்பொழுது, எல்லோரும் கர்ப்பக்கிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாகத் தரிசிக்கலாம். சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்துத் தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மற்ற எந்தச் சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இருக்கும் இவரை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்வுலகைக் காப்பதற்காக அமிர்தத்தைக் கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனைச் ...
ஜோதிட ரத்னா தா.இசக்கி ராஜ், B.Lit., த/பெ. N.S தாணு, செல் (whatsapp) : 9345934899