சோடச உபசாரம் என்பது கடவுளுக்கு செய்யும் பதினாறு விதமான உபசார பூஜைகள். சோடசம் என்றால் பதினாறு. பூஜைகளை தொடங்கும் முன்பு பூஜை செய்பவர் தன் உடம்பை சுத்தப்படுத்தி கருவறையை சுத்தப்படுத்தி பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தி அந்தந்த மூர்த்திக்குரிய மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
ஆவாகனம்: இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள செய்தல்
ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள செய்தல்
சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜை
சன்னிரோதனம்: இறைவன் கருணையோடு இருக்க வேண்டுதல்
அவகுண்டனம்: விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் கவசம் உண்டாக்குதல்
அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, திரவியம், மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், பன்னீர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.
பாத்தியம்: சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும்.
ஆசமனீயம்: ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும்.
அர்க்கியம்: எள், நெல், தர்ப்பை நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும்
புஷ்பதானம்: அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும்.
தூபம்: மூலவருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும்.
தீபம்: சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது.
நைவேத்தியம்: சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக
பானீயம்: இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.
ஜப சமர்ப்பணம்: இறைவனின் மூல மந்திரத்தை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே
ஆரத்தி: மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் வேண்டும். தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக சுற்றி காட்டுதல் வேண்டும்.
கருத்துகள்