Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

சுருட்டப்பள்ளி, சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.ஆனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார்.  விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.  அப்பொழுது, எல்லோரும் கர்ப்பக்கிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாகத் தரிசிக்கலாம். சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்துத் தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மற்ற எந்தச் சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இருக்கும் இவரை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்வுலகைக் காப்பதற்காக அமிர்தத்தைக் கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனைச் ...

தாமோதர லீலை

தமிழில் பன்னிரண்டு மாதங்கள் இருப்பதுபோல, சமஸ்கிருதத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் மாதம் மிகவும் விசேஷமானதாகும்.  20.10.2021 முதல் 19.11.2021 வரை தாமோதர மாதமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தா மோதர மாதத்தை கார்த்திக் மாதம் என்றும் அழைப்பதுண்டு. தாமோதர மாதத்தின் மகிமை தாமோதர மாதத்தின் மகிமை பல்வேறு புராணங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மாதங்களில் மிகவும் தூய்மையானதாக, புனிதமானதாக, மங்களகரமானதாக, புகழ் வாய்ந்ததாக, மற்றும் விஷேசமானதாக போற்றப்படுகின்றது தாமோதர மாதம். ஒருவர் இந்த மாதத்தில் சிறிதளவு பக்தி செய்தாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய பாவங்கள் அனைத்தையும் அழித்து, பக்தித் தொண்டில் பெரும் முன்னேற்றமடைய உதவுகிறார். தாமோதர மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது. கிருஷ்ண பக்தர்கள் இம்மாதம் முழுவதும் தினந்தோறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். தாமோதர லீலை இம்மாதத்திற்கு தாமோதர மாதம் என்று பெயர் வருவதற்கு, இம்மாதத்தின் திருநாள்...

அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு

அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம். இராமலிங்க அடிகள் ஊனுடம்பில் 1823 ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, அவ்வாண்டு சனவரி 30ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தன் உடலை ஒளியில் கரைத்துக்கொண்டு ஒளிவடிவம் பெற்று இறைவனோடு ஒன்றானார். அடிகளார் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கு வடமேற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர் என்ற விவசாய கிராமத்தில் 1823ம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் சுபானு‌ புரட்டாசி 21 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் மாலை 5.54 மணிக்கு தவத்திரு இராமையா பிள்ளை திருமதி.சின்னம்மையார் என்ற தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு சபாபதி பரசுராமர் என்ற இரு மூத்த சகோதரர்களும், சுந்தராம்பாள் உண்ணாமுலை என்ற மூத்த சகோதரிகளும் இருந்தனர். அடிகளார் ஐந்து இடங்களில் வாழ்ந்துள்ளார். 1823 ஆம் ஆண்டுமுதல் 1825ஆம் ஆண்டுவரை கைக்குழந்தையாக மருதூரிலும், 1825 முதல் 1858 வரை சென்னையிலும், 1858 முதல் 1867 வரை கடலூர் மாவட்டத்திலுள்ள கருங்குழி என்ற கிராமத்திலும், 1867 முதல் 1870 வரை வடலூரிலும், 1870 முதல் 1874 வரை மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத்திலும் வாழ்ந்துள்ளார்....

சடாரி

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும் . இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு பெருமாளின் திருவடிகளாக பாவித்து பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது .

விஜயதசமி ஏன் கொண்டாடுகிறோம்?

ஒருசமயம் அரக்கர்குல தலைவனான ரம்பா ஒரு எருமையை மணம் முடித்தான். அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன். மகிஷாசூரன் தேவர்களின் எதிரிகளான அசுர குலத்தினன். எருமையை வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு சுக்கிராச்சாரி.  மகிஷாசூரன் கடுந்தவம் நோற்று பிரம்மனிடம் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான் ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுத்தான்.  தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி ஒன்பது நாட்கள் அசையாமல் இருந்து பத்தாவது நாள் விஜயதசமி தினத்தன்று துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வதம் செய்தாள். ஒன்பது நாட்கள் எல்லா தெய்வங்களும் அசையாமல் தனது சக்திகள் அனைத்தையும் பார்வதியின் சக்தியுடன் சேர்த்தனர். அதன் காரணமாக நமது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுகிறோம்  மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி  என்று அழைக்கப்பட்டாள். .

மங்களம் தரும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகம்

சௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். வெள்ளிக்கிழமைகளிலும் இந்த லக்ஷ்மி அஷ்டகத்தை சொல்லலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம் ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம் ஓம்  ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம: ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம் சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம் ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம் மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம் மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த    சாரலக்ஷ்மீம் கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம் புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம் ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம் சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம் அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம் தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப லக்ஷ்மீம் லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக...

பூஜை செய்வது எப்படி

சோடச உபசாரம் என்பது கடவுளுக்கு செய்யும் பதினாறு விதமான உபசார பூஜைகள். சோடசம் என்றால் பதினாறு. பூஜைகளை தொடங்கும் முன்பு பூஜை செய்பவர் தன் உடம்பை சுத்தப்படுத்தி கருவறையை சுத்தப்படுத்தி பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தி அந்தந்த மூர்த்திக்குரிய மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும்.  ஆவாகனம் : இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள  செய்தல் ஸ்தாபனம் : இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள  செய்தல் சன்னிதானம் : நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜை  சன்னிரோதனம்:   இறைவன் கருணையோடு இருக்க வேண்டுதல்  அவகுண்டனம் : விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் கவசம் உண்டாக்குதல் அபிஷேகம் : எண்ணெய், மாப்பொடி, திரவியம், மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், பன்னீர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.  பாத்தியம் : சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த  பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்...