Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சுவாமி ஐயப்பன் கோவில்கள்

சொரிமுத்து ஐய்யானார் கோவிலில் ஆதி கிழவானாக பகவான் காட்சி தருகிறார். ஆரியங்காவில் மணந்த நிலையில் இளவயதாக துறந்த யோகத்தில் பகவான் காட்சி தருகிறார். அச்சங்கோவிலில் வயோதிக நிலையில் காட்டரசனாக பகவான் காட்சி தருகிறார். குழத்துபுழையில் குழந்தை ரூபத்தில் பகவான் காட்சி தருகிறார். பந்தளத்தில் யுவராஜனாக குடும்ப நிலையில் பகவான் காட்சி தருகிறார். எருமேலியில் வேட்டையாடும் வேட்டைகாரானாக பகவான் காட்சி தருகிறார். பொன்னம்பல மேட்டில் இயற்கையோடு இயற்கையாக சூட்சுமமாக (கண்ணுக்கு புலப்படாமல்) வடிவமின்றி பகவான் அருள் தருகிறார். சபரிமலை பூங்காவனத்தில் நித்தியபிரம்மச்சாரியாக தவமிருந்து பகவான் காட்சி தருகிறார்.

ஶ்ரீ ராமரின் முன்னோர்கள்

68 பரம்பரை கொண்ட ராமாரின் குல வம்சம் 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவ...

கௌரவர்கள்

1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்- Dussalan 4 ஜலகந்தன் - Jalagandha 5 சமன் - Saman 6 சகன் - Sahan 7 விந்தன் - Vindhan 8 அனுவிந்தன் - Anuvindha 9 துர்தர்சனன்- Durdharsha 10 சுபாகு - Subaahu 11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha 12 துர்மர்ஷனன் - Durmarshana 13 துர்முகன் - Durmukha 14 து...

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் உண்மையா?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த வரன்களை ஏற்றுக் கொள்ள பயப்படுவது ஏன்? ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால்தான் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகமும் ஏற்படுகிறது. இதையே ஆனி மூலம் அரசாளும் என்றனர். இதுவே பின்நாளில் ஆண் மூலம் அரசாளும் என்று மாறியது. மூலம் நட்சத்திரத்தில் 4வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளை நிர்மூலம் செய்து வெல்ல கூடிய திறமை உள்ளவர்கள். இதுதான் பின்மூலம் நிர்மூலம் என்றானது. பின்நாளில் பெண்மூலம் நிர்மூலம் என்றனர். லக்னத்துக்கு 3ம் வீடு மாமனார் வீடு இங்கு கேது இருந்தாலோ அல்லது 4 வது  9 வது வீடுகளில் கேது இருந்தாலோ மாமனாருக்கு கெடுதல் ஏற்படலாம். மற்றபடி மூலம் நட்சத்திரத்தில் மட்டுமே எந்த விதமான தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பரிகாரம்:- மூலம் நட்சத்திர அதிபதி கேது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர், திருப்பதி அருகே காளகஸ்தியில் இருக்கும் பாதாள விநாயகர் , மயிலாடுது...

வலம்புரிச் சங்கு தோன்றிய கதை

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை   தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன . அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார் . இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி , கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான் . கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு , குரு மகனை மீட்டுத் தந்தனர் . பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் - சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது . இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார் , அவரது வாழ்க்கையில் ...

வாஸ்து செய்யும் நாள்

சித்திரை       10 ம் தேதி வைகாசி       21 ம் தேதி ஆடி                 11 ம் தேதி ஆவணி          6 ம் தேதி ஐப்பசி           11 ம் தேதி கார்த்திகை    8 ம் தேதி தை                  12 ம் தேதி மாசி                22 ம் தேதி