மூலம் நட்சத்திரத்தில் பிறந்த வரன்களை ஏற்றுக் கொள்ள பயப்படுவது ஏன்?
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால்தான் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகமும் ஏற்படுகிறது. இதையே ஆனி மூலம் அரசாளும் என்றனர். இதுவே பின்நாளில் ஆண் மூலம் அரசாளும் என்று மாறியது.
மூலம் நட்சத்திரத்தில் 4வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளை நிர்மூலம் செய்து வெல்ல கூடிய திறமை உள்ளவர்கள். இதுதான் பின்மூலம் நிர்மூலம் என்றானது. பின்நாளில் பெண்மூலம் நிர்மூலம் என்றனர்.
லக்னத்துக்கு 3ம் வீடு மாமனார் வீடு இங்கு கேது இருந்தாலோ அல்லது 4 வது 9 வது வீடுகளில் கேது இருந்தாலோ மாமனாருக்கு கெடுதல் ஏற்படலாம். மற்றபடி மூலம் நட்சத்திரத்தில் மட்டுமே எந்த விதமான தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
பரிகாரம்:-
மூலம் நட்சத்திர அதிபதி கேது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர், திருப்பதி அருகே காளகஸ்தியில் இருக்கும் பாதாள விநாயகர் , மயிலாடுதுறை அருகே உள்ள கீழபெரும்பள்ளத்திற்க்கும் சென்று கேதுவிற்கான பரிகாரம் செய்தால் நன்மைகள் கிடைக்கும்.