விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடம்

கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத் துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால் விசுவாமித்திர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இறைவனும், இறைவியும் தனித்தனி மண்டபத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.

விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் யாகம் செய்துள்ளார். அதனால், இந்த விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி என்று பெயர்.

கணபதி சந்நிதிக்குள் வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

விசுவாமித்திரரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும் புஷ்ப அர்ச்சனையும் நடைபெறு கின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. 

கருத்துகள்