சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மாதிரியாக கொண்டு 18 படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு வந்து சபரிமலையில்
பூஜை செய்வதை போல் பூஜை செய்து இருமுடி இறக்கி விட்டு பக்தர்களே நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். அனைவரும் தரிசனம்.
ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் கோயில் கருவறை வரை சென்று வழிபாடு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பக்தனும் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளோடு 18 திருப்படிகள் ஏறி சென்று கருவறையில் அமர்ந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. மாலை அணிந்த சாமிகள் சாமிக்கு அபிஷேகம் செய்யலாம்.கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். மனைவியருடன் நவகிரகங்கள் இக்கோயிலில் கருவறையை சுற்றி வெளிப்புறத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பிரகாரத்தில் அன்னை காயத்ரி, அன்னை காமாட்சி, அன்னை லெட்சுமி, நாகராஜர், முத்து விநாயகர், அருணாசலேஸ்வரர், ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை, மாளிகை புறத்தமன் சிலைகள் அமைந்துள்ளன. கணவன் மனைவியாக ஐம்பொன் திருமேனிகள் கொண்டவர்களாக நவக்கிரகம் உள்ளது.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள சாம்பவர் வடகரையி்ல் பிரசித்த பெற்ற ஐயப்பன் கோவில்

Comments