ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வறுமையில் வாடினான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருநாள் வீப்ரதனை பார்த்து வீப்ரதா சௌக்கியமா என்றார். தாங்கள் யார். என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் உங்களை நான் இதுவரை பார்த்ததேயில்லையே என்றான் வீப்ரதன்.“இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன் என்றார் அந்த மகான்.
அதற்கு மனைவி அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும் சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்போது யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக அன்னதானம் செய்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம் என்றாள். வீப்ரதன் எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை ஏற்பாடுகளை செய்கிறேன். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றான்.
ஒவ்வோரு வீடாக சென்று ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பணிவுடன் கேட்டான் வீப்ரதன். இறைவனின் அருளால் உணவு பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களும் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி அனைவரையும் அழைத்தான் வீப்ரதன். அங்கு வந்தவர்களோ பரேதேசியாக இருப்பவன் சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். இவ்வாறு செய்தால் பணக்காரனாக மாறிவிடுவானா என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், அய்யா நான் ஒரு வழிப்போக்கன் பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன்.
பூஜை சிறப்பாக இருந்தது. உணவுக்காக தேடி வந்த நான் ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றான் வழிபோக்கன். ஸ்ரீசத்தியநாராயண பூஜையை காண கண்கோடி வேண்டும். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினான். பூஜையின் பயனாக வீப்ரதன், எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த தொழிலும் நல்ல லாபம் தந்தது. பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் மகளுக்கு திருமணம் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தது. பூஜையே செய்யா விட்டாலும், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே நன்மைகளை பெற்றான் வழிப்போக்கன். வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியவர்கள், முன் இருந்ததை போலவே இருந்தனர், புனிதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போது நம்முடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.


Comments