திருமாலின் ஐந்தாவது அவதாரம். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. வாமனன் என்றால் குள்ளவடிவினன் என்பது பொருள்.
பலிச்சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கி அவருக்கு அருள்புரியவும், அதிதியின் வேண்டுகோளின்படி தேவர்களைக் காக்கவும் எடுத்த திருமாலின் அவதாரம் வாமன அவதாரம் ஆகும்.
பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் மூன்றடி நிலத்தினை தானமாக வாமனன் கேட்டான். சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்காமல் மூன்றடி தானம் தர மாபலி சம்மதித்தான்.
அப்போது இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.
வாமன அவதாரத்தில் அந்தணச்சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மறுகையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார். காஞ்சிபுரத்திலுள்ள வாமனர் கோவிலில் இறைவன் வாமன அவதாரத்தில் காட்சி தருகிறார்.
Comments