கிரகணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ராகுவால் ஏற்படும் கிரகணம் இன்னொன்று கேதுவால் ஏற்படும் கிரகணம்.
கிரணங்களை பார்க்கப் போவோமேயானால் ராகு கேதுக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து இவை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே கணித்து இவற்றை ஜோதிடத்திலும் பயன்படுத்தினார்கள்.
கிமு 5114ல் அவதரித்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் தனுசுராசியில் ராகு இருந்தார் என்று கணிக்கப் பட்டதாலேயே தனுசில் இருக்கும் ராகுவிற்கு கோதண்டராகு ஆகும்.
ஒரு வருடத்தில் சாதாரணமாக இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும். சிலசமயம் மூன்று கிரகணங்கள் ஏற்படுவது உண்டு.
கிரகணத்தின்போது கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோணபத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம் அடையும்
ஜோதி வடிவான சூரிய சந்திரர்களையே சிவன்-சக்தி அம்மை அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள் வலுவிழப்பதால்தான் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்தபின் பரிகார பூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.
சிலகோவில்களில் சந்திர கிரகணத்தன்று சக்தியாகிய அன்னையின் திருவுருவச் சிலை கிரகண சமயம் தர்ப்பைப் புற்களாலான போர்வையால் முழுக்க மூடிவைக்கப்பட்டு கிரகணம் முடிந்தபின்பு நீக்கப்படுவது உண்டு. இதன் மூலம் கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை தோஷக் கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு.
இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில் புனித நீராடுவது நல்லது.
Comments