Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

கிரகணங்கள்1

கிரகணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ராகுவால் ஏற்படும் கிரகணம் இன்னொன்று கேதுவால் ஏற்படும் கிரகணம். இந்த இரண்டு வகைகளில் தற்போது ஏற்படுவது சந்திரனுடன் ராகு இணைவதால் ஏற்படும் கிரகணம்.

இனி ஜோதிடரீதியாக இந்த கிரணங்களை பார்க்கப் போவோமேயானால் ராகு கேதுக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து இவை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே கணித்து இவற்றை ஜோதிடத்திலும் பயன்படுத்திய இந்திய ஞானிகளின் மேதமை வெளிநாட்டினரை வியக்க வைக்கும் ஒன்று,

இந்திய ஜோதிடத்தில் மட்டுமே ராகு கேதுக்களுக்கு கிரக அந்தஸ்து கொடுக்கப் பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.ராமாயண காலம் எனப்படும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ராகு கேதுக்களைப் பற்றிய குறிப்புக்கள் நம்மிடையே இல்லை.

எனினும் கிமு 5114ல் அவதரித்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் தனுசுராசியில் ராகு இருந்தார் என்று கணிக்கப் பட்டதாலேயே தனுசில் இருக்கும் ராகுவிற்கு கோதண்டராகு என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு வருடத்தில் சாதாரணமாக இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும். சிலசமயம் மூன்று கிரகணங்கள் ஏற்படுவது உண்டு. 

கிரகணத்தின்போது கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோணபத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம் அடையும்

ஜோதி வடிவான சூரிய சந்திரர்களையே சிவன்-சக்தி அம்மை அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள் வலுவிழப்பதால்தான் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்தபின் பரிகார பூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

சிலகோவில்களில் சந்திர கிரகணத்தன்று சக்தியாகிய அன்னையின் திருவுருவச் சிலை கிரகண சமயம் தர்ப்பைப் புற்களாலான போர்வையால் முழுக்க மூடிவைக்கப்பட்டு கிரகணம் முடிந்தபின்பு நீக்கப்படுவது உண்டு. இதன் மூலம் கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை தோஷக் கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில் புனித நீராடுவது நல்லது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக கடகலக்னம் மற்றும் கடகராசி மற்றும் ஜாதகத்தில் சந்திர பகவானை சுபராகக் கொண்டவர்கள் கிரகண நேரத்தில் முக்கிய செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த நேரத்தில் சந்திர காயத்ரி போன்ற சந்திர துதிகளை தியானிப்பது அவர்களின் சந்திரபலத்தை தக்க வைக்கும்.


அடுத்து, சூரிய கிரகணம், சந்திரகிரகணம் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது, பூமியிலிருந்து பார்க்கும் போது, சூரியனும், சந்திரனும் வான் இணைதலில் இருந்தால் சூரிய கிரகணும் தோன்றும். இந்த நிகழ்வைத்தான் அமாவாசை நாள் என்கிறோம்.

இந்த நாளில் சூரியன் முழுவதுமோ, ஒரு பகுதியோ மறைக்கப்படும் முழுவதுமாக மறைக்கப்படுவது, ழுழு சூரிய கிரகணம் கொஞ்சமாக மறைக்கப்படுவது பகுதி சூரிய கிரகணம். சந்திரனுக்கும், பூமியை ஒரு தடவை சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இப்படி சுற்றி வரும் போது, பூமியில் உள்ளோருக்கு பல வகையாகக் காட்சியளிக்கிறது.

புது நிலவு என்பது அமாவாசையைக் குறிக்கும். புது பிறை நான்காம் நாள் தோன்றும். முதல் கால் பிறை - ஏழாம் நாள், வளர்மதி - பத்தாம் நாள், முழு நிலவு - பதினான்காம் நாள், தேய் மதி - பதினெட்டாம் நாள், இறுதி கால் பிறை - இரு பத்தியிரண்டாம் நாள், பழைய பிறை - இருபத்தியாறாம் நாள், திரும்பவும் புது நிலவு - இருபத்தி ஒன்பதாவது நாள் தோன்றும்.

புது நிலவன்று, அதாவது அமாவாசை தினத்தில் நிலவைப் பார்க்க முடியாது. அப்போது பூமியை நோக்கியுள்ள நிலவில், சூரியனின் ஒளிபடாது. அடுத்ததாக சந்திர கிரகணம். சந்திரன், பூமியின் பின்னால் நகர்ந்து செல்லும்போது, பூமி, சந்திரனின் மீது, சூரியக் கதிர்கள் படுவதை மறைத்து விடுகிறது.

அப்போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். பூமியானது, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் இருக்க வேண்டும். முழுநிலவில் மட்டுமே, அதாவது பௌர்ணமியில் மட்டுமே, சந்திர கிரகணம் ஏற்படும்.

சரி, இப்போது ஜோதிட விஷயத்திற்கு வருவோம். சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.

கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது பொதுவான ஜோதிட கணிப்பு. சூரியனும், ராகுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ முழு சூரிய கிரகண தோஷம்.

சூரியனும், கேதுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ, பகுதி சூரிய கிரகண தோஷம். சந்திரனும், கேதுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ பூரண சந்திர தோஷம். சந்திரனும், ராகுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ பகுதி சந்திர தோஷம்.

பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்றாலும். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தைப் பொதுவாகப் பார்த்து, கிரகண தோஷம் இருக்கிறது என்று சொல்வதைவிட, நன்றாக அனைத்து அம் சங்களையும், யோகங்களையும் ஆய்வு செய்து, பலன் சொல்வது தான் சிறப்பாக இருக்கும்.

உதாரணமாக சூரியன், ராகு சேர்ந்திருந்தால், இதில் நான்குவிதமான சேர்க்கைகள் இருக்கும். நல்ல நிலையில் அல்லது நற்பலன் தரும் நிலையில் சூரியனும், ராகுவும் சேர்ந்திருப்பது, கெடுபலன் தரும்.

சூரியன் மற்றும் கெடுபலன் தரும் ராகு, கெடுபலன் தரும் சூரியன் கெடுபலன் தரும் ராகு, இந்த நான்கு அமைப்புகளில், கடைசி இரு அமைப்புகள் மட்டுமே கிரகண தோஷம் உள்ள அமைப்புகளாகக் கருதப்படும். நற்பலன் தரும் ராகு, கெடுபலன் தரும் சூரியனோடு இணைந்திருந்தாலும் தோஷம் ஆகாது.

காரணம் நற்பலன் தரும் கிரகங்கள். ஜாதகத்தில் எதிர்மறை பலன்களைத் தருவதில்லை. மேலும் கடைசி இரு அமைப்புகளில், சூரியனும், ராகுவும் நன்கு வலுப்பெற்றிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஒட்டுமொத்த கிரகச் சேர்க்கையின் பலன், பலவீனம், சூரியன், ராகுவின் மீது, பிற கிரகங்களின் நல்லது அல்லது கெட்டது தாக் கத்தையும் அறிய வேண்டும்.

இரு கிரகச் சேர்க்கைக்கான பலனைச் சொல்லும்போது, ஜாதகத்தில் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய வேண்டும். அதனுடைய பலம், ஏற்படுத்தும் தாக்கம், தாக்கம் ஏற்படுத்தும் காலகட்டம் ஆகியனவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். சூரியன் - கேது, சூரியன்-ராகு, சந்திரன்-கேது சேர்க்கைகளை மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, இறுதி முடிவுக்கு வர வேண்டும்.

ஏனெனில் நற்பலன் தரும் சூரியனும், கேதுவும் ஜாதகத்தில் இருந்தால், அது நல்ல அமைப்பு தானே. அதனால் நற்பலன்கள் தான் கிட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பதவி, அதிகாரம், எதனையும் ஆழமாக ஊடுருவிப் புரிந்து கொள்ளுதல், புத்திசாலித்தனம், நிர்வாகத்திறன் போன்ற நற்பலன்களை, சூரியனும், ராகுவும் ஜாதகத்தில் வலுப்பெற்றிருக்கும் போது வழங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

சூரியனோடு சந்திர னோடு, ராகுவோ அல்லது கேதுவோ வலுப்பெற்றிருக்கும் போது சேர்ந்திருப்பது என்பது சில ஜாதகத்தில் அபூர்வமாக நிகழ்வதுண்டு. அது தோஷஜாதகமல்ல, யோக ஜாதகமே.

கிரகண தோஷத்தினால் ஏற்படும் தாக்கத்தினால் விளையக் கூடிய பலன்கள் என்னவாக இருக்கும் என்றால் - குழந்தைப் பேறின்மை, கருச்சிதைவு ஏற்படுதல் அல்லது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறப்பது, வீட்டில் தொடர்ந்து காரண, காரியமில்லாமல் நிலவும் பிரச்சனைகள்,

பணியிடத்தில், வியாபாரம் செய்யுமிடத்தில் தொடர்ந்து ஏமாற்றம், வீட்டிலும், வெளியிலும் அமைதியின்றி, எப்போதும் பதட்டத்துடன் இருத்தல், எவ்வளவு தான் சிறந்த முயற்சி எடுத்தாலும், கொஞ்சம் கூட அதற்குரிய பலன் கிடைக்காமல் இருத்தல், வேலையை, வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பதில் குளறுபடி, உடலாலும், மனதாலும் நோய் மற்றும் பல பிரச்சனைகள் சூழ்ந்தபடியே இருத்தல் என்று கெடுபலன்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

இதனால் பாதிப்படைந்த நபர் மீது பிறருக்கு நல்ல அபிப்பிராயமே ஏற்படாது. கிரகண தோஷத்தின் தாக்கம் முழுமையாக சிலருக்கு இருக்காது. சிசேரியன் என்ற அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தை, குறைப் பிரசவம் ஆகி, இன்குபேட்டரில் வளர்ந்த குழந்தை, டெஸ்ட் டியூப் பேபி, உத்திராயண,

தட்சாயண சந்திப்பில் பிறந்த குழந்தை, லக்ன சந்திப்பில் பிறந்த குழந்தை, நட்சத்திர சந்திப்பில் பிறந்த குழந்தை ஆகியனவற்றிற்கு, கிரகண தோஷத்தின் கெடுபலன்கள் முழுவதுமாக இருக்காது. ஜாதக பலன்களும் பூரணமாக ஒத்து வராது என்பது பொதுவான ஜோதிட விதியாகும்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...