திருமாலின் ஆறாவது அவதாரம். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. இவர் கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமானவர். இன்றும் மகேந்திர பர்வதத்தில் சீரஞ்சீவியாக தவம் புரிகிறார்.
துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார். இவர் ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவர்.
தந்தை சொல்லை தட்டாது செய்பவர். தந்தை இட்ட ஆணைக்கிணங்க தாயையும், சகோதரர்களையும் கொன்று மீண்டும் அவர்களை தந்தையின் மூலம் உயிர்பித்தவர்.
தனது தந்தையைக் கொன்ற காத்தவீரியார்சுனன் அரசனின் மகன்களைக் கொன்றதோடு இருபத்தியோரு தலைமுறை சத்திரியர்களை கொன்று குவித்தார்.
சிவனிடமிருந்து பெற்ற பரசு எனப்படும் கோடாரி கையில் ஏந்தி அருள்பாலிக்கிறார். கன்னியாகுமரி கோவிலில் நீலநிறக் கல்லில் பரசுராம அவதாரத்தில் திருமால் அருளுகிறார்.
கருத்துகள்