- ஸ்ரீ கபால பைரவர் (ஞாயிறு) : சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சனை உள்ளவர்கள், அரசு சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ உருபைரவர் (திங்கள்) : சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தாயின் உடல் நலபாதிப்பு, மன அமைதியின்மை போன்றவற்றால் பாதிப்பு உள்ளவர் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்) : செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷமுள்ளவர்கள்சகோதரரிடம் பிரச்சனை உள்ளவர்கள், நிலம், வீடு, சொத்து பிரச்சனை உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்) : புதன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தாய் மாமன் வழியில் பிரச்சனை உள்ளவர்கள், கல்வியில் பிரச்சனை உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ உன்மத்த பைரவர் (வியாழன்) : வியாழன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், வியாழன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வழியில் பாதிப்பு உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ குரோதன பைரவர் (சுக்கிரன்) : சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கணவன் மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ சம்கார பைரவர் (சனி) : சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், மாங்கல்ய தோஷமுள்ளவர்கள், அடிக்கடி ஆயுளுக்கு ஒத்த கண்டங்களை அனுபவிப்பவர், கை, கால் பாதிப்பு உள்ளவர்கள், உடலில் அங்கஹீனம் உள்ளவர்கள், வண்டி, வாகனங்களில் விபத்தை சந்திப்பவர், எதிரியின் தொல்லைகளை அனுபவிப்பவர் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ பீஷண பைரவர் (ராகு) : ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சனை உள்ளவர்கள், ஒழுக்கம்,கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
- ஸ்ரீ சொர்ணாகர்ஷ்ண பைரவர் (கேது) : கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், கேது நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், பன்னிரெண்டாம் வீட்டில் கேது உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சனை உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும்.
மேல சொன்னது போல நாம் ஸ்ரீ நவ கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீ நவ பைரவர்கள் வணங்கி நலம் பெற்று அனைவருக்கும் நலம் கிடைக்க இறைவனை வணங்குவோம்.
எண்ணமே பலிதம்
கருத்துகள்